அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் பல கூட்டணிகள் உடையலாம்: கமல் கணிப்பு

Updated : நவ 22, 2020 | Added : நவ 22, 2020 | கருத்துகள் (24)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் பல கூட்டணிகள் உருவாகலாம்; பல கூட்டணிகள் உடையலாம் என மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.சென்னை அடையாறில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் வாக்களித்த நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சித் தலைவருமான கமல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக - பா.ஜ., கூட்டணி
Kamal, MNM, Alliance, கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம், தலைவர், கமல், கூட்டணி

சென்னை: தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் பல கூட்டணிகள் உருவாகலாம்; பல கூட்டணிகள் உடையலாம் என மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை அடையாறில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் வாக்களித்த நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சித் தலைவருமான கமல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக - பா.ஜ., கூட்டணி ஏற்கெனவே தெரிந்த செய்திதான். அதை தற்போது உறுதிபடுத்தியுள்ளார்கள். மருத நாயகத்தில் வரும் பாடல் 17ம் நூற்றாண்டு காலத்தை குறிப்பிட்டு எடுக்கப்பட்டதால் அதில் மனுநீதியை பற்றி குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அப்புத்தகம் புழக்கத்தில் இல்லாதது உண்மை. அப்புத்தகம் தேவையில்லை என்பது இன்னொரு மிகப்பெரிய உண்மை. அதற்கான ஏற்பாடுகளைத்தான் நாம் ஒரு சமூகமாக கூடி செய்து கொண்டிருக்கிறோம்.


latest tamil news


வேகம் போதாது என்பது நமது மனக்குறை. நியாயமான மனக்குறைதான். கூட்டணி குறித்து சொல்லவேண்டிய நேரம் இதுவல்ல. தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் பல கூட்டணிகள் உருவாகலாம்; பல கூட்டணிகள் உடையலாம். அனுமதி கிடைத்தவுடன் தேர்தல் பரப்புரையை தொடங்குவேன். ஊடகத்தின் தேவை எங்களுக்கும் இருக்கிறது. எங்களின் தேவை உங்களுக்கும் இருக்கிறது. எல்லோரும் கொஞ்சம் கவனமாக இருப்போம். இதை தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
23-நவ-202012:20:42 IST Report Abuse
கல்யாணராமன் சு. \\ஆனால் அப்புத்தகம் புழக்கத்தில் இல்லாதது உண்மை. அப்புத்தகம் தேவையில்லை என்பது இன்னொரு மிகப்பெரிய உண்மை..........\\ ..புழக்கத்தில் இல்லாத புத்தகம், தேவையில்லை என்பது என்ன சித்தாந்தமோ? புழக்கத்தில் இல்லாத 1000 ரூபாய் நோட்டு தேவையில்லை என்பது மாதிரியா?
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
23-நவ-202008:23:33 IST Report Abuse
Bhaskaran ஊடகங்களை விலை பேசுகிறார் .நல்ல விலை கிடைக்கும் சிலர் தயாராக இருப்பார்கள்
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
23-நவ-202008:22:23 IST Report Abuse
Bhaskaran ஊடகங்களை விலை பேசுகிறார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X