சுயச்சார்பு கிராமங்கள் சுயச்சார்பு இந்தியாவுக்கு வலு சேர்க்கும்: பிரதமர்

Updated : நவ 22, 2020 | Added : நவ 22, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி: ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் குடிநீர் என்ற திட்டத்தை உத்தர பிரதேசத்தில் இன்று (நவ., 22) தொடங்கி வைத்த பிரதமர் மோடி சுயச்சார்பு கிராமங்களின் தேவையை வலியுறுத்தினார்.உத்தர பிரதேசத்தின் விந்தியா பிராந்தியத்தில் உள்ள சோன்பத்ரா மற்றும் மிர்சாபூருக்கு ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் குடிநீர் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. காணொளி வாயிலாக நடந்த
PMModi, Launches, HarGharNalYojna, Villages, UttarPradesh, Benefit

புதுடில்லி: ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் குடிநீர் என்ற திட்டத்தை உத்தர பிரதேசத்தில் இன்று (நவ., 22) தொடங்கி வைத்த பிரதமர் மோடி சுயச்சார்பு கிராமங்களின் தேவையை வலியுறுத்தினார்.

உத்தர பிரதேசத்தின் விந்தியா பிராந்தியத்தில் உள்ள சோன்பத்ரா மற்றும் மிர்சாபூருக்கு ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் குடிநீர் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. காணொளி வாயிலாக நடந்த இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றனர். ரூ.5,555.38 கோடி மதிப்பிலான இத்திட்டம் இரண்டு மாவட்டங்களில் உள்ள 41 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு குடிநீர் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


latest tamil news


திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: இந்த பகுதி இயற்கை வளங்களால் நிறைந்தது. ஆனால் சுதந்திரம் பெற்றதிலிருந்து எப்போதும் புறக்கணிக்கப்படுகிறது. இப்பகுதியில் பல ஆறுகள் இருந்தபோதிலும் குடிநீர் பிரச்னை காணப்பட்டது. இந்த அரசாங்கம் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கண்டது. அதன் விளைவாக இன்று ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் குழாய் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சுயச்சார்பு கொண்ட கிராமங்கள், சுயச்சார்பு இந்தியாவுக்கு வலு சேர்க்கின்றன. இவ்வாறு கூறினார்.

அடுத்து பேசிய முதல்வர் ஆதித்யநாத்: சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்றுவரை 398 கிராமங்களுக்கு மட்டுமே குழாய் குடிநீர் கிடைத்தது. இப்போது, ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 2,995 கிராமங்கள் பயனடையப் போகிறது. இத்திட்டத்தால் மிர்சாபூரில் 21,87,980 கிராம மக்கள் பயனடைவார்கள். சோன்பத்ராவில், 19,53,458 குடும்பங்கள் பயனடைவார்கள். ஏரிகள் மற்றும் ஆற்றின் நீர் சுத்திகரிக்கப்பட்டு சோன்பத்ராவில் உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும். இத்திட்டத்தின் மொத்த செலவு ரூ.5555.38 கோடி. இந்த திட்டம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-நவ-202006:10:21 IST Report Abuse
ஆப்பு டாஸ்மாக்கை மூடாமல் குடி குடியைக் கெடுக்கும்னு பாட்டில் லேபில் ஒட்டற மாதிரி இருக்கு நம்ம சுயச்சார்பு.
Rate this:
Cancel
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
23-நவ-202005:55:23 IST Report Abuse
NicoleThomson இதைத்தான் ஐயா அப்துல் கலாமும் சொன்னார் அன்று முதல் இன்று வரை அவரின் தொண்டனாக வாழ்ந்துவரும் எனது நண்பர் பெங்களூரு வாசகர் சன்ஜீவ கூட இதையே சொல்வர் , எனது வயலின் ஒவ்வொரு அணுவையும் அவர் தெளிவாக சொல்லுவாரு , எனது சோலார் மெஷின்களை கூட அவர் ஜுகாட் முறையில் உருவாக்கி தந்தது தான், அவர் கூறுவது ஒன்றே தொன்நுத்தெட்டு சதவீதம் நாம் நம்மை சார்ந்தே இருப்பேன் இரண்டு சதம் மாத்திரம் வெளியே நம்புவோம் என்று , இப்போ நம்ம பிரதமர் கூட அதையே சொல்லுறார் பாப்போம்
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
23-நவ-202000:34:19 IST Report Abuse
தமிழவேல் இவரு இப்படி பேசி பேசியே காலத்தை ஓட்டுராரு.. இன்னைக்கு சட்டை பட்டன், மெழுகுவத்தி, பேணா பென்சில், ரப்பர் ன்னு எல்லாமே சீனாலேருந்து வருங்கிறது இவருக்கு தெரியல. அந்த உற்பத்தி எல்லாம் நசுங்கி கடைகளில் பல பொருள்கள் சீனா சாமான்க மட்டும்தான் கிடைக்குது. பல குடிசைத் தொழில் இல்லாம போயிட்டுது. சமீபத்தில் பார்த்தேன் பிரம்பு கூடை , பொம்மை எல்லாமே இறக்குமதி. இதுவெல்லாம் நம்மால் உற்பத்தி செய்ய முடியாதா ? அப்படி முடியாது என்றால் அந்த குறையை நிவர்த்தி செய்யலாமே. இறக்குமதியை தடை செய்ய வேண்டியதுதானே ? அல்லது வரும் பொருட்களுக்கு அமேரிக்கா செய்வது போல அதிகால் வரி போடலாமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X