சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆவதில் தேஜஸ்விக்கு சிக்கல்

Updated : நவ 22, 2020 | Added : நவ 22, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
பாட்னா: பீஹாரில் தனிக் கட்சியாக அதிக இடங்களை வென்றதில் தேஜஸ்வியின் ராஷ்டிரிய ஜனதா தளம் முதலிடத்தில் இருந்தாலும், ஊழல் வழக்குகளை காரணம் காட்டி எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கக் கூடாது என எதிர்ப்பு எழுந்துள்ளது.பீஹார் சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் தே.ஜ., கூட்டணி, 125 இடங்களைப் பெற்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நிதிஷ் குமார் முதல்வராக பதவியேற்றார்.
TejashwiYadav, Faces, CorruptionCharges, OppositionLeader, JDU, தேஜஸ்வி யாதவ், எதிர்க்கட்சி, தலைவர், ஊழல்

பாட்னா: பீஹாரில் தனிக் கட்சியாக அதிக இடங்களை வென்றதில் தேஜஸ்வியின் ராஷ்டிரிய ஜனதா தளம் முதலிடத்தில் இருந்தாலும், ஊழல் வழக்குகளை காரணம் காட்டி எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கக் கூடாது என எதிர்ப்பு எழுந்துள்ளது.

பீஹார் சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் தே.ஜ., கூட்டணி, 125 இடங்களைப் பெற்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நிதிஷ் குமார் முதல்வராக பதவியேற்றார். நிதிஷைத் தொடர்ந்து, 13 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ., மேவாலால் சவுதிரியும் ஒருவர். கல்வி அமைச்சராக பதவியேற்ற அவர் முன்னதாக பல்கலை துணை வேந்தராக இருந்தார். அப்போது லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு உள்ளது. இதனை காரணம் காட்டி தேஜஸ்வி யாதவ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் 2 நாளில் அவர் பதவியை ராஜினாமா செய்தார்.


latest tamil news


இந்த நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக தேஜஸ்வி தேர்வாக உள்ளார். அதற்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “தேஜஸ்வி மீதும் ஊழல் வழக்குகள், எஸ்.சி., எஸ்.டி., பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஏற்கக்கூடாது. மேவாலால் பதவி விலகியிருப்பது குற்றம், ஊழல், வகுப்புவாதம் போன்றவற்றை நிதிஷ் சகித்துக்கொள்ளாதவர் என்பதை காட்டுகிறது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் போது தேஜஸ்வி தன் மீதான முழு வழக்கு விவரங்களையும் அளிக்கவில்லை. வேண்டுமென்றே மறைத்துவிட்டார். தேர்தல் ஆணையம் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு கூறியுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
23-நவ-202007:09:18 IST Report Abuse
natarajan s ஜாதிமட்டுமே ஒரு வேட்பாளரின் வெற்றியை நிர்ணயிக்கும் சமூகம் பிஹாரில். இவரது கட்சி தலைவர், இவரது குடும்பம் மொத்தமும் ஊழல் செய்தார்கள் என்று தெரிந்தும், இவர் மீண்டும் ஜெயிக்கிறார் என்றால் அவர்களது இன பற்று எவ்வளவு உள்ளது, இதேபோல்தான் தமிழ்நாட்டிலும் ஜெயா ஊழலை வழக்கில் தண்டிக்க பட்ட பிறகும், இருமுறை முதல்வராக ஆனார், என்ன ஜன நாயகம் இது. மேலும் இரண்டு இடங்களுக்கு மேல் நமக்கு தாக்கல் செய்தால் தகுதி இழப்பது நடைபெறும் என்று தெரிந்தே நான்கு இடத்தில மனு தாக்கல் செய்தார், மனு நிராகரிக்கப்பட்டது, தேர்தலில் நிற்க முடியாமல் போனது, அதை திமுக வேண்டும் என்றே இவரை தேர்தலில் நிற்க சதி செய்து விட்டது என்று பிரச்சாரம் செய்து முதல்வர் ஆகிறார் . தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் கிடையாது, உச்ச நீதி மன்றமும் தலை இடது, பாராளு மன்றத்தில ஒன்றும் செய்ய முடியாது, பின் எப்படி யோக்கியமானவர்கள் தேர்தலில் நிற்க முன் வருவார். குற்றவாளிகளிகளின் கூடாரம் ஆகிவிட்டது நமது சட்ட மன்றங்கள்.
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
23-நவ-202015:56:46 IST Report Abuse
Dr. Suriyaஅப்போ சர்க்காரியா கமிஷன் சொன்ன விஞ்ஞானி ஊழலின் தந்தை அதுக்கப்புறம் முதல்வராகவே ஆகவில்லையா என்ன...?...
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
23-நவ-202003:44:46 IST Report Abuse
J.V. Iyer இவருக்கு ஒரு நியாயம், அவருக்கு ஒரு நியாயமா? லல்லு மகன் பேரில் இவ்வளவு ஊழலா? சர்தான் போங்கள் கட்டுமர குடும்பம் போல உள்ளதே தேவுடா?
Rate this:
Chennai B.S - Chennai,ஐக்கிய அரபு நாடுகள்
23-நவ-202008:55:27 IST Report Abuse
Chennai B.Sகொளுத்தி போடுங்க...
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
23-நவ-202010:44:16 IST Report Abuse
Malick Rajaபார தீய ஜனதா கட்சி தேசிய தலைவர் பங்காரு லட்சுமணன் அவர்களது ஆட்சி காலத்தில் லஞ்சம் பெற்று சிறைத்தண்டனை பெற்று மறைந்தவர் ... இது வரலாற்றில் இடம்பெற்ற ஒன்றாகி விட்டது ..இது போன்ற அவலம் ஒரு சிறிய கட்சியின் தலைமைக்கு கூட இந்தியாவில் ஏற்பட்டதில்லை .. ஆக ஊழலின் ஊற்றுக்கண் பார தீய ஜனதா கட்சி .....
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
23-நவ-202016:02:40 IST Report Abuse
Dr. Suriyaஅதுக்கு முன்னாடியே வந்த சர்க்காரியா கமிஷன் அறிக்கை தான் ஊழலின் ஊற்றுக்கண், விஞ்ஞான ஊழலின் தந்தை என்று அறியப்படுவது பொய்யின்னு சொல்ல வரின்ங்களா... அது எல்லாம் சரி, கனியக்கா, ராஜா மற்றும் கிங் பின்னுன்னு அறியப்பட்ட பசி இவங்க எல்லாம் உள்ள பெரிய லெவெலுக்கு கொண்டு போனவங்கன்னு சொல்லலாமா........
Rate this:
Cancel
krish - chennai,இந்தியா
22-நவ-202022:38:17 IST Report Abuse
krish நிதீஷ்> தேஜஸ்விக்கு : என் கேள்விக்கு என்ன பதில்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X