‛ஸ்புட்னிக் வி' மருந்து விலை குறைவு: ரஷ்யா

Updated : நவ 22, 2020 | Added : நவ 22, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
மாஸ்கோ: கொரோனாவிற்கு எதிரான அமெரிக்காவின் ‛பைசர்' மற்றும் ‛மாடர்னா' தடுப்பூசி விலையை விட ரஷ்யாவின் ‛ஸ்புட்னிக் -வி' யின் விலை குறைவு என ரஷ்யா தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அந்த தடுப்பு மருந்தை தயாரிக்கும் நிறுவனம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: பைசர் தடுப்பு மருந்து ஒரு டோசுக்கு 19.50 டாலர் எனவும், மாடர்னா நிறுவனத்தின் மருந்து டோசுக்கு 25 முதல் 37 டாலர்
Sputnik V, price, Pfizer, Moderna, vaccines, SputnikV,

மாஸ்கோ: கொரோனாவிற்கு எதிரான அமெரிக்காவின் ‛பைசர்' மற்றும் ‛மாடர்னா' தடுப்பூசி விலையை விட ரஷ்யாவின் ‛ஸ்புட்னிக் -வி' யின் விலை குறைவு என ரஷ்யா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த தடுப்பு மருந்தை தயாரிக்கும் நிறுவனம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: பைசர் தடுப்பு மருந்து ஒரு டோசுக்கு 19.50 டாலர் எனவும், மாடர்னா நிறுவனத்தின் மருந்து டோசுக்கு 25 முதல் 37 டாலர் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒருவருக்கு பைசர் மருந்தின் விலை 39 டாலர், மாடர்னா மருந்து 50 முதல் 74 டாலர் வரை செலவாகும். கொரோனாவை கட்டுப்படுத்த ஒருவருக்கு 2 டோஸ் அளவுக்கு பைசர், ஸ்புட்னிக் வி, மாடர்னா மருந்துகள் தேவைப்படும். அதேநேரத்தில் ஸ்புட்னிக் -வி மருந்தின் விலை, மற்ற இரண்டை விட குறைவாக தான் இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news




கொரோனாவுக்கு எதிராக உலக நாடுகள் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க தீவிரமாக இருந்த நிலையில், ‛ஸ்புட்னிக்-வி' என்ற தடுப்பு மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்யா முதலில் தெரிவித்தது. பின்னர் அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்த மருந்து 95 சதவீதம் பலனை தருவதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல், மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசியும் 94.5 சதவீத பலனை தருவதும் தெரியவந்தது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
22-நவ-202021:08:57 IST Report Abuse
S. Narayanan முழு பலன் தராத மருந்தை எப்படி மக்கள் ஏற்பார்கள்.
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
22-நவ-202019:51:02 IST Report Abuse
 Muruga Vel சீனா வாக்சின் இன்னமும் மலிவா கிடைக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X