பிரேசிலில் கருப்பின குடிமகன் படுகொலை; வன்முறையாக மாறிய போராட்டம்

Updated : நவ 22, 2020 | Added : நவ 22, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
பிரேசிலியா: அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் ஜார்ஜ் புளாயிட் என்ற கருப்பின குடிமகன் வெள்ளை இன போலீசாரால் கொல்லப்பட்டது உலகம் முழுவதும் இனவெறிக்கு எதிராக மக்களை குரல் கொடுக்க வைத்தது. அமெரிக்காவில் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்த காலகட்டத்தில் டிரம்ப் அரசுக்கு எதிராக கருப்பின அமைப்புகள் போராடின.இந்த போராட்டம் வன்முறையாக மாறி அமெரிக்காவின் முக்கிய
Brazil, BlackMan, Violence, BeatenToDeath, CarrefourStore, பிரேசில், கருப்பினத்தவர், படுகொலை, வன்முறை, போராட்டம்

பிரேசிலியா: அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் ஜார்ஜ் புளாயிட் என்ற கருப்பின குடிமகன் வெள்ளை இன போலீசாரால் கொல்லப்பட்டது உலகம் முழுவதும் இனவெறிக்கு எதிராக மக்களை குரல் கொடுக்க வைத்தது. அமெரிக்காவில் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்த காலகட்டத்தில் டிரம்ப் அரசுக்கு எதிராக கருப்பின அமைப்புகள் போராடின.

இந்த போராட்டம் வன்முறையாக மாறி அமெரிக்காவின் முக்கிய மாகாணங்களில் கடைகள் சூறையாடப்பட்டன. பொது சொத்துக்களுக்கு போராட்டக்குழுவினர் சேதம் ஏற்படுத்தினர். பல ஆண்டுகளாகவே அமெரிக்காவில் கருப்பின குற்றவாளிகள் அமெரிக்க போலீசார் கடுமையாக நடத்தப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டது. ஜார்ஜ் படுகொலையை அடுத்து மனநலம் பாதிக்கப்பட்ட கருப்பின அமெரிக்கர் ஒருவர் போலீசாரின் மூர்க்கமான செயலால் கொல்லப்பட்டார். அதற்கும் பலத்த கண்டனங்கள் எழுந்தன. நிலைமை சற்று சீராக இருக்கும் இந்த நேரத்தில் தற்போது பிரேசிலில் கருப்பின குடிமகன் ஒருவர் கொல்லப்பட்டது கருப்பின மக்களிடையே மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil news


ஜோ ஆல்பர்டோ சில்வர் ரியா ப்ரீடாஸ் என்கிற 40 வயதான கறுப்பின பிரேசில் குடிமகன் போலீசாரால் மூர்க்கமாக தாக்கப்பட்ட கொல்லப்பட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவியது. இதனை அடுத்து பிரேசிலின் ரியோ கிராண்ட் டூ மாகாணத்தில் வன்முறை போராட்டம் அரங்கேறியது. குளோபோ நியூஸ் என்ற பிரேசில் ஊடகம் வெளியிட்ட அறிவிப்பின்படி காரிபோர் என்ற பிரபல சூப்பர் மார்க்கெட் வாசலில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்த பெண் ஊழியர் தன்னை ஜோ ஆல்பர்ட்டோ தாக்க வருவதாகவும் அவரை தடுக்க வேண்டும் என்றும் அந்த சூப்பர் மார்க்கெட்டின் தனியார் பாதுகாப்பு அதிகாரிகளிடம் குற்றஞ்சாட்டியுள்ளார்.


latest tamil news


இதனையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் ஜோவை பலமாகத் தாக்கியுள்ளனர். இதனால் அவர் மரணமடைந்துள்ளார். அவரது மரணத்தை அடுத்து கருப்பின ஆதரவாளர்கள் காரிபோர் சூப்பர் மார்க்கெட் கடைகளை அடித்து நொறுக்க துவங்கினர். இதனையடுத்து அந்த சூப்பர் மார்க்கெட்டின் நிறுவனர் பாதுகாப்பு அதிகாரிகளின் மூர்க்கத்தனமான செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தங்களது நிறுவனம் எப்போதும் இனவெறியை ஆதரிக்காது என்று அவர் கூறியுள்ளார்.

நேற்று இந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் பிரேசில் காவலர்கள் இதில் தலையிட்டு போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த கண்ணீர் புகை வீசினர். சம்பந்தப்பட்ட தனியார் பாதுகாப்பு அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரேசில் நாடாளுமன்ற சபாநாயகர் ரோட்ரிகோ மையா உறுதி அளித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mindum vasantham - madurai,இந்தியா
23-நவ-202008:57:19 IST Report Abuse
mindum vasantham vellai krithuvarkal pala ina padukolaikalai seithullanar anaal avarkal thaan manitha urimayin guardianaaka ullanar
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
23-நவ-202006:05:45 IST Report Abuse
 Muruga Vel இந்த மாதிரி சம்பவம் நடந்தால் சூப்பர் மார்க்கெட்ல சாமான் திருடறது நெருப்பு வைக்கிறது நியாயமா ...
Rate this:
Cancel
22-நவ-202019:41:56 IST Report Abuse
ஆரூர் ரங் கறுப்பின வெறுப்புன்னாலும் அதுவும் சாதிவெறிதான்😡. ஒரு வேளை வெள்ளைக் கிறித்தவன் செய்தால் நியாயமோ என்னவோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X