சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரியலூர் அருகே வாலிபர் வெட்டி புதைப்பு

Added : நவ 22, 2020
Share
Advertisement
பெரம்பலுார்: அரியலுார் அருகே, வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டெடுத்தனர்.அரியலுார் மாவட்டம், தெற்கு ஆயுதகளம் கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன்குமார்,23, இவர், வெல்டிங் பட்டறை வைத்து தொழில் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை வேலைக்கு சென்றவர் இரவு வீட்டிற்கு வரவில்லை. இந்நிலையில், காலையில் ஆயுதகளத்தில் இருந்து

பெரம்பலுார்: அரியலுார் அருகே, வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டெடுத்தனர்.
அரியலுார் மாவட்டம், தெற்கு ஆயுதகளம் கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன்குமார்,23, இவர், வெல்டிங் பட்டறை வைத்து தொழில் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை வேலைக்கு சென்றவர் இரவு வீட்டிற்கு வரவில்லை.
இந்நிலையில், காலையில் ஆயுதகளத்தில் இருந்து அணைக்கரை செல்லும் சாலையில் ஊரின் ஒதுக்குப்புறமாக பயனற்ற கூரை கொட்டகையின் அருகே ரத்தங்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தது.இதை கண்ட அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, அங்கு வந்த ஜெயங்கொண்டம் போலீசார் அப்பகுதியில் சோதனையிட்டனர்.அப்போது, அப்பகுதியில் கழிப்பறை செப்டிக் டேங்கில், தெற்கு ஆயுதகளம் கிராமத்தை சேர்ந்த, பிரவீன்குமார் பலத்த வெட்டு காயங்களுடன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.அவரது உடலை தோண்டி எடுத்த ஜெயங்கொண்டம் போலீசார், அதை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து, ஜெயங்கொண்டம்போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X