சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேல் யாத்திரையில் அணிவகுத்த கார்களுக்கு சிறை

Updated : நவ 23, 2020 | Added : நவ 22, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
கோவை:மருதமலை முருகன் கோவிலில் வேலுக்கு பூஜை செய்து யாத்திரையை துவங்கினார் பா.ஜ., மாநில தலைவர் முருகன். கந்தசஷ்டி கவசத்தை இழிவு படுத்தி சமூக ஊடகத்தில் வெளியிட்டவர்களை கண்டித்து தமிழ்நாட்டில் பா.ஜ., வேல் பூஜை அறிவித்தது. இதையடுத்து முருக பெருமானின் அறுபடை வீடுகளிலும் வேல் யாத்திரை நடைபெறும் என்று பா.ஜ., மாநில தலைவர் முருகன் அறிவித்தார். இந்த வேல் யாத்திரைக்கு

கோவை:மருதமலை முருகன் கோவிலில் வேலுக்கு பூஜை செய்து யாத்திரையை துவங்கினார் பா.ஜ., மாநில தலைவர் முருகன்.latest tamil newsகந்தசஷ்டி கவசத்தை இழிவு படுத்தி சமூக ஊடகத்தில் வெளியிட்டவர்களை கண்டித்து தமிழ்நாட்டில் பா.ஜ., வேல் பூஜை அறிவித்தது. இதையடுத்து முருக பெருமானின் அறுபடை வீடுகளிலும் வேல் யாத்திரை நடைபெறும் என்று பா.ஜ., மாநில தலைவர் முருகன் அறிவித்தார். இந்த வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை.
இருப்பினும் தடையை . கடந்த நவ., 6 அன்று, திருத்தணியில் வேல் யாத்திரையை மாநில தலைவர் முருகன் துவங்கினார். தடையை மீறியதால் அவர் கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து அவர் பல்வேறு இடங்களிலும் வேல் யாத்திரை துவங்குவதும், கைது செய்வதும் நடந்தது.
இந்நிலையில் முருகனின் ஏழாவது படை வீடாக பக்தர்களால் போற்றப்படும் மருதமலை சுப்ரமணியசுவாமி கோவிலில் கர்நாடக துணை முதலமைச்சர் அஸ்வந்த் நாராயண் , பா.ஜ., மாநில தலைவர் முருகன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் வேல்யாத்திரையை துவக்க சென்றனர்.
மருதமலைக்கோவில் நுழைவாயிலில், கர்நாடக துணை முதலமைச்சர் அஸ்வந்த் நாராயணன் மற்றும் தமிழக பா.ஜ., மாநில தலைவர் முருகன் ஆகியோருக்கு சிவாச்சாரியர்கள் பூர்ண கும்பம் கொடுத்து வரவேற்று மரியாதை செய்தனர்.
இதையடுத்து கோவிலுக்கு சென்றவர்கள் சிறப்பு தரிசனம் செய்தனர். கோவிலை பிரத்க்ஷனம் வந்து கோவில் தீபஸ்தம்பத்திற்குமுன்பு வந்த பின் பா.ஜ.,தலைவர் முருகனிடம் பூஜை செய்யப்பட்ட வெற்றிவேல் வழங்கப்பட்டது. வெற்றிவேலோடு, கர்நாடக துணை முதல்வர் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட தொண்டர்களோடு காரில் புறப்பட்ட பா.ஜ., தலைவர் முருகன் மலையிலிருந்து கீழே காரில் இறங்கி. பொதுக்கூட்டம் நடைபெறும் சிவானந்தா காலனியை நோக்கி கார்கள் அணிவகுத்து சென்றன.


latest tamil newsஅப்போது மலையடிவாரத்தில் காத்திருந்த போலீசார் முருகன், கர்நாடக துணை முதல்வர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் வந்த ஐந்து கார்களை தவிர மற்ற 15 பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களது கார்களை நிறுத்தி சிறைபிடித்தனர். இதை கண்டித்து பா.ஜ., தொண்டர்கள் மருதமலை அடிவாரத்தில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் இறங்கினர். போலீசாருக்கும் பா.ஜ.,வினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு சில நிமிடங்களில் சுமுகமானது. இதையடுத்து பா.ஜ.,வினர் செல்ல போலீசார் அனுமதித்தனர். இதனால் அங்கு சில நிமிடங்கள் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
23-நவ-202014:56:51 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam அரசியல் சைவத்தைக் கேவலப்படுத்துவது பல குளறுபடிகளை உருவாக்கும் நிலை ஏற்படும். கேவலமான அரசியல் தவிர்க்கப்பட வேண்டும். தமிழக மக்கள் அரசியல் சூழ்சிகளுக்குள் சிக்கக் கூடாது.
Rate this:
Cancel
bigu -  ( Posted via: Dinamalar Android App )
23-நவ-202011:00:29 IST Report Abuse
bigu வேல் யாத்திரை நடப்பதுபோல் தெரியவில்லையே ,எங்கு பார்த்தாலும் உதயநிதி முழக்கம்தான் தென்படுத்து
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
23-நவ-202010:57:54 IST Report Abuse
Malick Raja வேல் யாத்திரையால் பார தீய ஜனதாவுக்கு பின்னடைவு மட்டுமே என்பது வரும் தேர்தலில் தெளிவாகிவிடும் .. யாத்திரை என்றால் அமைதியாக செல்வதே சரியாக்கும் . காரில் செல்வாராம் அதிலும் ஊரு விட்டு ஊர் .. நகரத்தில் மட்டும் யாத்திரையும் இடைவெளியில் ஓய்வுடன் தூக்கத்தில் பயணமாம்.. இதெல்லாம் மக்களுக்கு தெரியாமலா போகும் என்று குறைந்த பட்ச அறிவற்று இருப்பது இவர்களுக்கு மிக்கபெரிய பின்னடைவை கொடுக்கும் .. "L ' முருகனை சோபிக்கவிடாமல் செய்வதற்கு வேலயாத்திரை பாஜக பெருந்தலைகளால் பின்னப்பட்ட்ட வலை என்பது உண்மை ..
Rate this:
Yuvaraj Velumani - india,ஐக்கிய அரபு நாடுகள்
23-நவ-202011:52:56 IST Report Abuse
Yuvaraj Velumaniபிஜேபி யா பத்தி நீ கவலை படாதே....
Rate this:
Yuvaraj Velumani - india,ஐக்கிய அரபு நாடுகள்
23-நவ-202011:53:43 IST Report Abuse
Yuvaraj Velumaniநீ ஏன்டா கவலை படுற. நீ பொய் உன் கூடாத பாரு...
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
23-நவ-202011:56:08 IST Report Abuse
Dr. Suriyaஎப்படி கட்டுமரம் ஈழ தமிழருக்காக காலையில் சாப்பிட்டு விட்டு குளிர்சாதன வசதியுடன் மேடை போட்டு படுக்க மெத்தை எல்லாம் போட்டு மத்திய சாப்பாட்டுக்கு முன் உண்ணாவிரதத்தை தன் மனைவி மற்றும் துணைவியுடன் செய்தார் அது போலவா.. ஆமா முருகனை சோபிக்கக்கறதை எல்லாம் நாங்க பார்த்துக்கிரோம்.. நீங்க உங்க மார்க்கத்தை மட்டும் பாருங்க அதுதான் இப்போ உலகளாவிய தீவிரவாதம்முன்னு ஆயிக்கிட்டு இருக்கு.....அத மாத்த பாருங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X