இந்திய ரிசர்வ் வங்கியின் டிவிட்டர் கணக்கில் சுமார் 10 லட்சம் பாலோவர்களைப் பெற்று உலகளவில் சாதனை படைத்துள்ளது. உலகிலேயே பல சக்திவாய்ந்த மத்திய வங்கிகளும், பல சக்திவாய்ந்த பொருளாதாரா நாடுகள் இருக்கும் நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியின் டிவிட்டர் கணக்கு தான் முதல் முறையாக 10 லட்சம் பாலோயர்களைப்(1 மில்லியன் ) பெற்று அசத்தியுள்ளது.இது இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையைப் பிரதிபலிக்கும் ஒன்றாக உள்ளது.

10 லட்சம் பாலோவர்கள்
செப்டம்பர் 27ஆம் தேதி இந்திய ரிசர்வ் வங்கியின் டிவிட்டர் கணக்கை பின்பற்றுவோர் எண்ணிக்கை 9.66 லட்சமாக இருந்த நிலையில், நவம்பர் 22ஆம் தேதி இதன் எண்ணிக்கை 10 லட்சமாக உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் 2020--21 மட்டும் ரிசர்வ் வங்கி டிவிட்டர் கணக்கை சுமார் 2.5 லட்சம் பேர் பின்தொடர்ந்துள்ளனர்.

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தனது டிவிட்டர் கணக்கில், தெரிவித்துள்ளதாவது: 'இந்திய ரிசர்வ் வங்கியின் டிவிட்டர் கணக்கு 10 லட்சம் பாலோயர்களைப் பெற்றுள்ளது. இந்தப் புதிய உயரத்தை அடைந்துள்ளோம். இந்தத் தருணத்தில் ரிசர்வ் வங்கியில் என்னுடன் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
85 ஆண்டுகளாக இயங்கி வரும் ரிசர்வ் வங்கி ஜனவரி 2012ஆம் ஆண்டு தான் டிவிட்டர் கணக்கை துவங்கியது. ஆனால் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் மார்ச் 2009லும், ஐரோப்பிய மத்திய வங்கி அக்டோபர் 2009லும் டிவிட்டரில் அறிமுகமானது. ஆனாலும் இந்திய ரிசர்வ் வங்கிதான் முதலில் 10 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE