சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல் வாலிபர் இருவர் பலி

Added : நவ 22, 2020
Share
Advertisement
பெரம்பலுார்:பெரம்பலுார் அருகே, மாலை இரண்டு டூவீலர்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு வாலிபர்கள் உயிரிழந்தனர்.பெரம்பலுார் மாவட்டம், திருமாந்துறை கிராமத்தை சேர்ந்தவர்கள் ஜெயச்சந்திரன் மகன் அரவிந்த்,24, ஆறுமுகம் மகன் அரவிந்த்,23, முனியசாமி மகன் முத்துக்குமார்,18, இவர்கள் மூவரும் நேற்று மாலை 6.30 மணியளவில் ஒரு ஹீரோ டூவீலரில் சு.ஆடுதுறையிலிருந்து திருமாந்துறைக்கு

பெரம்பலுார்:பெரம்பலுார் அருகே, மாலை இரண்டு டூவீலர்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு வாலிபர்கள் உயிரிழந்தனர்.
பெரம்பலுார் மாவட்டம், திருமாந்துறை கிராமத்தை சேர்ந்தவர்கள் ஜெயச்சந்திரன் மகன் அரவிந்த்,24, ஆறுமுகம் மகன் அரவிந்த்,23, முனியசாமி மகன் முத்துக்குமார்,18, இவர்கள் மூவரும் நேற்று மாலை 6.30 மணியளவில் ஒரு ஹீரோ டூவீலரில் சு.ஆடுதுறையிலிருந்து திருமாந்துறைக்கு சென்றுகொண்டிருந்தனர்.
டூவீலர் லப்பைகுடிகாடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே வந்தபோது, திருமாந்துறை நோவா நகர் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் மகன் ரஞ்சித்குமார்,24, என்பவர் ஓட்டி வந்த மற்றொரு ஹீரோ டூவீலர் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
இதில், படுகாயமடைந்த நான்கு பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு பெரம்பலுார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இதில், ஆறுமுகம் மகன் அரவிந்த் பெரம்பலுார் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலும், ரஞ்சித்குமார் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர்.இது குறித்து, மங்களமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X