அரசியல் செய்தி

தமிழ்நாடு

தைப்பூசத்தை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும்:பா.ஜ. மாநில தலைவர் முருகன் வலியுறுத்தல்

Updated : நவ 22, 2020 | Added : நவ 22, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
கோவை: தைப்பூசத்திருநாளை தமிழக அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று கோவையில் நடைபெற்ற வேல்யாத்திரை பொதுக்கூட்டத்தில் பா.ஜ.,மாநிலத்தலைவர் முருகன் வலியுறுத்தினார்.கோவை சிவானந்தாகாலனியில் நடைபெற்ற வேல் யாத்திரை பொதுக்கூட்டத்தில், கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாராயணன் பேசியதாவது: வெற்றிவேல் வீரவேல் என்று தமிழில் உரையை துவங்கினார். தமிழ் கடவுள்

கோவை: தைப்பூசத்திருநாளை தமிழக அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று கோவையில் நடைபெற்ற வேல்யாத்திரை பொதுக்கூட்டத்தில் பா.ஜ.,மாநிலத்தலைவர் முருகன் வலியுறுத்தினார்.latest tamil newsகோவை சிவானந்தாகாலனியில் நடைபெற்ற வேல் யாத்திரை பொதுக்கூட்டத்தில், கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாராயணன் பேசியதாவது: வெற்றிவேல் வீரவேல் என்று தமிழில் உரையை துவங்கினார். தமிழ் கடவுள் முருகனையும், கந்த சஷ்டிக் கவசத்தையும் அவதூறாகப் பேசிய கருப்பர்கூட்டத்தை சாதாரணமாக விட்டுவிடக்கூடாது.
கருப்பர் கூட்டத்துக்கு பின்னணியில் இருப்பது தி.மு.க., என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தி.மு.க.வின் இந்து விரோத போக்கிற்கு எதிராக பா.ஜ., தொண்டர்கள் பொங்கி எழுந்துள்ளனர். தமிழக மக்கள் பா.ஜ.,அரியணையில் ஏறுவதற்கு வாய்ப்பு கொடுப்பார்கள் என்று நம்புகிறோம்.
தமிழகத்தை தாண்டி, கர்நாடகா, தெலுங்கான, ஆந்திரா, கேரளா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் தமிழக பா.ஜ.,நடத்தி வரும் வேல் யாத்திரை குறித்து ஒவ்வொரு நாளும் பேசப்பட்டு வருகிறது. இவ்வாறு துணை முதல்வர் அஸ்வத் நாராயணன் பேசினார்.பா.ஜ., மாநில தலைவர் முருகன் பேசியதாவது:, வேல் யாத்திரையை துவங்கியதிலிருந்து தி.மு.க.,தலைவர் ஸ்டாலினுக்கு தூக்கம் போய் விட்டது. அதற்கேற்ப வேல் யாத்திரை அமைதியாக நடந்து வருகிறது. கடலூர், திருவண்ணாமலையில் மக்களிடம் நல்ல ஆதரவு கிடைத்துள்ளது..
கொரோனா வைரஸிற்கு பயந்து தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்தார். ஆனால் பா.ஜ.,வினர் கொரோனா ஊரடங்கு காலத்திலும் வெளியே வந்து ஏழை எளியவர்களுக்கு உணவு சமைத்து வழங்கினோம்.


latest tamil newsகபசுரகுடிநீர், மாஸ்க், உடலுக்கு எதிர்ப்புச்சத்து வரவழைக்கும் மருந்துகளையும் பொருட்களையும் வழங்கினோம்.
கந்த சஷ்டி கவசத்தையும் தமிழ் கடவுள் முருகனையும் இழிவுபடுத்தியவர்களுக்கு தக்க பாடம் புகட்டப்படும். ஊழல் என்பது தி.மு.க.,வுடன் பிறந்தது. ஊழலையும் தி.மு.க.,வையும் பிரிக்க முடியாது. தி.மு.க.,ஆட்சியைப் பிடிக்கும் கனவு கனவாகவே இருக்கும்.
மற்ற மத பண்டிகைகளுக்கு அரசு விடுமுறை விடப்படுவது போல தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் தைப்பூச விழாவுக்கு, தமிழக அரசு விடுமுறை அளிக்க வேண்டும். இவ்வாறு முருகன் பேசினார்.
பா.ஜ.,மாநில துணைத்தலைவர் அண்ணாமலை பேசுகையில்,'' 2021 சட்டசபை தேர்தலில் கோவை பா.ஜ.,கோட்டை என்பதை நிரூபிக்கும்,'' என்றார்.
பா.ஜ.,தேசிய மகளிர் அணித் தலைவி வானதி ஸ்ரீனிவாசன் பேசுகையில்,'' வரும் சட்டசபை தேர்தலில் கோவையிலிருந்து அதிக எண்ணிக்கையில்,பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்து மக்களையும் இந்து தெய்வங்களையும் இழிவுபடுத்துவதை ஏற்கவோ அமைதி காக்கவோ முடியாது,'' என்றார்.
பா.ஜ., மாநில பொது செயலாளர் செல்வகுமார், பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். பல ஆயிரக்கணக்கான பா.ஜ.,தொண்டர்கள் பங்கேற்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
23-நவ-202011:41:30 IST Report Abuse
Malick Raja அடேங்கப்பா .. ஏம்ப்பா காங்கிரஸ் ஆட்சியில் ரூ 67 பெட்ரோல் விற்றது அன்று குருடாயில் 170 டாலரில் இருந்தது ..அன்று நம்ம கட்சி போராட்டம் நடத்தியது ..இன்று பெட்ரோல் விலை ரூ 85. குருடாயில் 40 டாலரில் இருக்கிறது இது நல்ல வளர்ச்சி ..இதை ஏன் நாம் பேசுவதில்லை முருகா .. " L " முருகன் ...கடவுள் முருகனை போல வேலுடன் செல்வார் .. முருககடவுளின் வேஷ்டி பச்சை கலரிலோ சட்டை காவி நிறத்திலோ இல்லையே .. இதென்ன கோலம் என்று பார்ப்பவர்கள் நினைப்பார்கள் என்று
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
23-நவ-202006:09:54 IST Report Abuse
 Muruga Vel குட் ஃப்ரைடே போன்ற நாட்களுக்கு அமெரிக்காவிலேயே விடுமுறை கிடையாது ..பஞ்சாங்கத்தை பார்த்தா 365 நாளும் ஏதாவது விசேஷம் இருக்கு ..இந்த ரேஞ்சுக்கு நீங்க பேசறது நியாயமா ..
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
22-நவ-202022:38:58 IST Report Abuse
Ramesh Sargam வொவொரு விழாவிற்கும் இப்படி விடுமுறை கேட்பது சரியல்ல. யார் யாருக்கு எந்தஎந்த பண்டிகை முக்கியமோ அவர்கள் ஒரு casual leave (சாதாரண விடுப்பு) எடுத்துக்கொண்டு பண்டிகையை கொண்டாடலாம். ஏனென்றால் நமது ஹிந்து கலாச்சாரத்தில் நூற்றுக்கணக்கான பண்டிகைகள் உள்ளன. அவற்றிர்க்கெல்லாம் விடுமுறை கோரினால், அது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும். அது சரியல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X