'ஜல் ஜீவன்' திட்டத்தால் 2.6 கோடி குடும்பங்கள் பயன்: பிரதமர் மோடி

Updated : நவ 24, 2020 | Added : நவ 22, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி:''ஜல் ஜீவன்' திட்டத்தால், ஒன்றரை ஆண்டுகளில், 2.6 கோடி குடும்பங்கள் பயன் அடைந்துள்ளன,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.உத்தர பிரதேசத்தில், முதல்வர் ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.குடிநீர் இணைப்பு இங்குள்ள விந்திய பிராந்தியத்தில், சோன்பத்ரா மற்றும் மிர்சாபூர் மாவட்டங்களில், 5,555 கோடி ரூபாய் செலவில், குழாய் மூலம், வீடுகளுக்கு
'ஜல் ஜீவன்' திட்டத்தால் 2.6 கோடி  குடும்பங்கள் பயன்: பிரதமர் மோடி

புதுடில்லி:''ஜல் ஜீவன்' திட்டத்தால், ஒன்றரை ஆண்டுகளில், 2.6 கோடி குடும்பங்கள் பயன் அடைந்துள்ளன,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.


குடிநீர் இணைப்பு



இங்குள்ள விந்திய பிராந்தியத்தில், சோன்பத்ரா மற்றும் மிர்சாபூர் மாவட்டங்களில், 5,555 கோடி ரூபாய் செலவில், குழாய் மூலம், வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம், நேற்று துவங்கப்பட்டது, 'வீடியோ கான்பரன்சிங்' வழியாக, இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி, பிரதமர் பேசியதாவது: நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமப்புற வீட்டுக்கும், குடிநீர் இணைப்பு வழங்கும், 'ஜல் ஜீவன்' இயக்கம், ஒன்றறை ஆண்டுக்கு முன் துவக்கப்பட்டது.

மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் வாயிலாக, இதுவரை, 2.6 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு, குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தங்களது வீடுகளிலேயே குடிநீர் கிடைப்பதால், நம் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் வாழ்க்கை, மிகவும் சுலபமாகி உள்ளது.


பிரச்னை



அசுத்தமான தண்ணீரால் ஏழைக் குடும்பங்கள் இடையே நிலவிவந்த, காலரா, டைபாய்டு, மூளை வீக்கம் போன்ற பல்வேறு நோய்கள், ஜல் ஜீவன் திட்டத்தால் குறைந்துள்ளன.விந்திய பிராந்திய பகுதி இயற்கை வளங்களால் நிறைந்தது. ஆனால் சுதந்திரம் பெற்றதில் இருந்து, தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தது. இப்பகுதியில் பல ஆறுகள் இருந்தாலும், குடிநீர் பிரச்னை இருந்து வருகிறது. ஆனால், இப்போது இந்தப் பிரச்னைக்கு, உ.பி., அரசு தீர்வு கண்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்றின் அபாயம் இன்னும் நீடிப்பதால், மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும். இவ்வாறு, பிரதமர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-நவ-202015:46:22 IST Report Abuse
ஆப்பு மழை பெஞ்சு எல்லார் ஊட்டுக்குள்ளேயும் தண்ணி வந்திருச்சே... ஜல் ஜீவன் யோஜனா .... வருண பகவான் தே தியா ஹை...
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
23-நவ-202011:47:08 IST Report Abuse
Malick Raja பெட்ரோல் விலை ..டாலர் விலை ..வளர்ச்சியால் 25 கோடி குடும்பங்கள் வீழ்ச்சியடைந்திருப்பது தெரியவில்லை ..அதை மறைக்க இதுபோன்ற ஜம்பங்கள்
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
23-நவ-202018:51:05 IST Report Abuse
கொக்கி குமாரு இந்திய மக்கள் தொகை 130 கோடிகள், தாங்கள் பாகிஸ்தான் மக்கள் தொகையை மறந்து சொல்கிறீர்கள்....
Rate this:
Cancel
23-நவ-202011:12:18 IST Report Abuse
பாமரன் தல... பாராட்டுக்கள் தல...👏👏
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X