ஏரியில் குப்பைகள் மற்றும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

Added : நவ 22, 2020
Share
Advertisement
சின்னசேலம் : சின்னசேலம் அம்சாகுளம் ஏரியில் குப்பைகளைக் கொட்டுவதால் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.சின்னசேலம் அம்சாகுளத்தில் 350 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி மூலம் சுற்றியுள்ள 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஏரியில் தண்ணீர் நிரம்பினால், அருகே உள்ள கிணற்றில் ஊற்றெடுத்து நிரம்பி அதன் மூலம் பேரூராட்சி நிர்வாகம் நகர மக்களுக்கு குடிநீர்

சின்னசேலம் : சின்னசேலம் அம்சாகுளம் ஏரியில் குப்பைகளைக் கொட்டுவதால் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

சின்னசேலம் அம்சாகுளத்தில் 350 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி மூலம் சுற்றியுள்ள 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஏரியில் தண்ணீர் நிரம்பினால், அருகே உள்ள கிணற்றில் ஊற்றெடுத்து நிரம்பி அதன் மூலம் பேரூராட்சி நிர்வாகம் நகர மக்களுக்கு குடிநீர் வழங்கி வருகிறது.

இந்நிலையில், அப்பகுதிகளில் சேரும் குப்பைகளை ஏரியில் கொட்டுகின்றனர். மேலும், கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், ஏரியே தெரியாத அளவிற்கு முட்புதர்கள் மண்டியுள்ளன.

தற்போது ஏரியில் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள் நடந்து வரும் நிலையில், அம்சாகுளம் பகுதியிலுள்ள புதர் மண்டிய இடங்களை சுத்தம் செய்து குப்பைகளை அகற்ற வேண்டும். மேலும், ஒரே இடத்தில் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை சீரமைத்து, கழிவுநீர் செல்வதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X