பொது செய்தி

தமிழ்நாடு

ரிஷிவந்தியம் - தியாகதுருகம் சாலையில் தரைப்பால தடுப்புச்சுவர் புதுப்பிப்பு

Added : நவ 22, 2020
Share
Advertisement
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் - தியாகதுருகம் சாலையில் உயரம் குறைவாக இருந்த தரைப்பால தடுப்புச்சுவர் தினமலர் செய்தி எதிரொலியால் புதுப்பிக்கப்பட்டு உயர்த்தப்பட்டது.ரிஷிவந்தியத்தில் இருந்து தியாகதுருகம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் 1,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பைக், கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் செல்கின்றனர். இது தவிர லோடு ஏற்றி செல்லும் கனரக

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் - தியாகதுருகம் சாலையில் உயரம் குறைவாக இருந்த தரைப்பால தடுப்புச்சுவர் தினமலர் செய்தி எதிரொலியால் புதுப்பிக்கப்பட்டு உயர்த்தப்பட்டது.

ரிஷிவந்தியத்தில் இருந்து தியாகதுருகம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் 1,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பைக், கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் செல்கின்றனர். இது தவிர லோடு ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் இவ்வழியாக செல்கின்றன. இங்குள்ள வனப்பகுதியில் விழும் மழை நீர், பெரியாயி அம்மன் கோவில் அருகே உள்ள சாலையினை கடந்து ரிஷிவந்தியம் பெரிய ஏரிக்கு செல்லும் வகையில் ஓடை உள்ளது.

இதற்காக சாலையில் தரைப்பாலம் அமைக்கப்பட்டு, சாலையின் இருபுறமும் சிறிய அளவிலான தடுப்புச்சுவர் கட்டப்பட்டது. சாலை புதுப்பிக்கப்பட்டதால், தரைப்பாலத்தின் தடுப்புச்சுவரின் உயரம் சிறியதாகியது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் நீடித்தது. இது குறித்து கடந்த சில தினங்களுக்கு முன் தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக தடுப்புச்சுவர் புதுப்பிக்கப்பட்டு, உயர்த்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X