பொது செய்தி

தமிழ்நாடு

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பேரவை கூட்டம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை கூட்டம் கள்ளக்குறிச்சியில் நேற்று நடந்தது.கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆனந்தகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் சரவணன் வரவேற்றார். மாநில செயலாளர் வாசுகி துவக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் மகாலிங்கம், பொருளாளர் ரவி ஆகியோர் அறிக்கை வாசித்தனர். நிர்வாகிகள் பார்த்தசாரதி, ரஹீம்,

கள்ளக்குறிச்சி : தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை கூட்டம் கள்ளக்குறிச்சியில் நேற்று நடந்தது.

கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆனந்தகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் சரவணன் வரவேற்றார். மாநில செயலாளர் வாசுகி துவக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் மகாலிங்கம், பொருளாளர் ரவி ஆகியோர் அறிக்கை வாசித்தனர். நிர்வாகிகள் பார்த்தசாரதி, ரஹீம், செந்தில், வேலாயுதம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கூட்டத்தில் சங்க கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடுதல், கொரோனா தொற்று காலத்தில் பறிக்கப்பட்ட அகவிலைபடி, சரண்டர்விடுப்பு, வருங்காலவைப்பு நிதி வட்டி குறைப்பு ஆகியவற்றை மீண்டும் வழங்குதல், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், ஊர்புற நுாலகர்கள் ஆகியோருக்கு கால முறை ஊதியம் வழங்கவேண்டும்.

அரசு அலுவலர், ஊழியர்கள் மீது தனிநபர் தாக்குதலை தடுத்து நிறுத்தி, பணி பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது. மாநில செயலாளர் நம்பிராஜன் நிறைவுரையாற்றினார். மாவட்ட இணை செயலாளர் சாமிதுரை நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X