பொது செய்தி

தமிழ்நாடு

சத்தரை குட்டைக்கு வேலி அமைக்க கோரிக்கை

Added : நவ 22, 2020
Share
Advertisement
சத்தரை : சத்தரை ஊராட்சியில், துார் வாரி சீரமைக்கப்பட்ட சத்தரை குட்டைக்கு, வேலி அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். கடம்பத்துார் ஒன்றியம், மப்பேடு ஊராட்சியிலிருந்து, எறையாமங்கலம், கம்மவார்பாளையம், நுங்கம்பாக்கம், மேல்நல்லாத்துார் வழியாக, மணவாள நகர் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது.இந்த நெடுஞ்சாலை வழியே, தனியார் தொழிற்சாலை பஸ், ஷேர் ஆட்டோ மற்றும்

சத்தரை : சத்தரை ஊராட்சியில், துார் வாரி சீரமைக்கப்பட்ட சத்தரை குட்டைக்கு, வேலி அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கடம்பத்துார் ஒன்றியம், மப்பேடு ஊராட்சியிலிருந்து, எறையாமங்கலம், கம்மவார்பாளையம், நுங்கம்பாக்கம், மேல்நல்லாத்துார் வழியாக, மணவாள நகர் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது.இந்த நெடுஞ்சாலை வழியே, தனியார் தொழிற்சாலை பஸ், ஷேர் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் என, தினமும் 1,000த்துக்கும் மேற்பட்ட வாகனங்கள், மணவாள நகர் சென்று வருகின்றன.இந்த சாலையோரம் சத்தரை ஊராட்சிக்குட்பட்ட பஸ் நிறுத்தம் அருகே, சத்தரை குட்டை, 2019ம் ஆண்டு, அக்டோபர் மாதம், துார் வாரி சீரமைக்கப்பட்டது.

இந்த சத்தரை குட்டைக்கு, வேலி இல்லாததால், இந்த நெடுஞ்சாலை வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர்.தற்போது, இந்த குட்டையில் மழைநீர் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில், நெடுஞ்சாலையோரம் மின் விளக்குகள் இல்லாததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய நிர்வாகத்தினர், சத்தரை குட்டையைச் சுற்றி வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X