ரஜினியுடன் பிரதமர் மோடி பேசுவாரா?

Updated : நவ 24, 2020 | Added : நவ 22, 2020 | கருத்துகள் (31)
Share
Advertisement
அமித் ஷாவின் தமிழக பயணம் முடிந்த மறுநாள், அதாவது இன்று, டில்லியில் அரசியல் ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. பிரதமர் மோடி, அமித் ஷா, கட்சி தலைவர் நட்டா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோருடன், தமிழக, பா.ஜ., பொறுப்பாளர்களும், இந்த கூட்டத்தில் பங்கேற்கஉள்ளனர். தமிழக சட்டசபை தேர்தல் வியூகம் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. தன் பயணம்
PM Modi, Rajinikanth, Rajini, பிரதமர், மோடி, ரஜினி, ரஜினிகாந்த்

அமித் ஷாவின் தமிழக பயணம் முடிந்த மறுநாள், அதாவது இன்று, டில்லியில் அரசியல் ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

பிரதமர் மோடி, அமித் ஷா, கட்சி தலைவர் நட்டா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோருடன், தமிழக, பா.ஜ., பொறுப்பாளர்களும், இந்த கூட்டத்தில் பங்கேற்கஉள்ளனர். தமிழக சட்டசபை தேர்தல் வியூகம் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

தன் பயணம் வாயிலாக அறிந்த விஷயங்களையும், இந்த கூட்டத்தில் அமித் ஷா விளக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்த கூட்டத்தின் முடிவில், ஒரு முக்கிய முடிவும் எடுக்க உள்ளனர் என்கின்றனர், பா.ஜ., மூத்த தலைவர்கள். ரஜினியுடன், பிரதமர் மோடி போனில் பேச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது; இது, தமிழகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் சொல்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - chennai,இந்தியா
23-நவ-202022:38:30 IST Report Abuse
sankar பொதுவாக இறைவனிடம் எனக்கு நல்ல புத்தியை கொடு என வேண்டுவோம் இப்போ இறைவா ரஜினி சாருக்கு அரசியல் மாற்ற்றத்துக்காக அவருக்கு நல்ல புத்தியை கொடு என இறைவனிடம் வேண்டுவோம்
Rate this:
Cancel
SANAKYAN - TAMIZHAN,இந்தியா
23-நவ-202019:28:41 IST Report Abuse
SANAKYAN இன்னைக்கே ரஜினி அரசியலை அறிவித்தாலும் நாளையே நீ தமிழன் இல்லை தமிழன் தமிழன் தான் ஆளவேண்டும் என்று ஒரு கூட்டம் கொடிப்பிடிக்கும் ...இது மற்ற மாநிலத்தில் வாழும் தமிழனையும் பாதிக்கும் ...இதை ரஜீனி யோசித்திருக்கலாம் ....ரஜினி போல் வேற யாராவது உச்சத்தில் இருந்திருந்தால் வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டே படம் மட்டும் நடித்து கொடுத்து விட்டு போகலாம் ஆனால் தன் ரசிகர் மேல் உள்ள அன்பால் தமிழ் நாட்டில் வாசித்து வருகிறார் குடும்பத்தோடு ...அரசியலுக்கு வரத்தும் வராததும் அவர் அவர் விருப்பம் மக்கள் பணத்தை ஆட்டையே போட்டு தான் வாழனும் என்றால் எப்போதோ ரஜினி அவர்கள் அரசியலுக்கு வந்திருப்பார் ...யாரை பத்தி வேண்டுமானாலும் கருத்து சொல்ல தான் நம்மால் முடியும் ஆனால் ஆண்டவன் அருளால் உச்சத்தில் வாழ ரஜீனி போன்ற ஒரு சிலரால் தான் முடியும் ...
Rate this:
Cancel
Samson - Adelaide ,ஆஸ்திரேலியா
23-நவ-202018:29:32 IST Report Abuse
Samson திரு ரஜினி ஏன் அரசியலுக்கு வரவேண்டும்? 1. கடந்த 1977 ஆண்டு முதல் (43ஆண்டுகள்) அதிமுக-திமுக மாறி,மாறி ஆண்டுவருகிறது. 2. MLA க்கள் சுமார் 500 கோடிக்குமேல் பினாமிகள் பெயரில் சொத்துக்கள் சேர்ந்து ஊழலை, அதிகார துஷ்பிரயோகம் 3. MPக்கள் மந்திரிகள் 1000 கோடிக்குமேல் சொத்தை குவித்துள்ளார்கள் 4. கல்வித்துறையில் தனியார் பள்ளிகளை ஊக்குவித்தது மட்டுமின்றி, இவர்களே பள்ளிகள், கல்லூரிகள் மாநிலம் முழுவதும் பினாமி/மனைவி பெயரில் நடத்தி ஆங்கிலம்/ஹிந்தி/பிரெஞ்ச்/இத்தாலி/ரஷ்யன்/உலகமொழிகள் அனைத்து வசதியுடன் நடத்தி …அரசுப்பள்ளியை அடிப்படை வசதியின்றி/ஆங்கிலமும் இன்றி/தமிழையும் கடமைக்கு நடத்தி கிராம/பஞ்சாயத்து பள்ளிக்குழந்தைகளின் எதிர்காலத்தை நாசமடைய வைத்துள்ளனர் 5. சாராயாலையை இவர்களே நடத்தி TASMAC அரசே நடத்தி மக்களை சிந்தவிடாமல் வைத்துள்ளனர் 6. இரண்டு கட்சிகளுமே பத்திரிக்கை,/தொலைக்காட்சி/இணையதளம் நடத்தி மக்களைமூளைச்சலவை செய்துள்ளார்கள்… 7. எதிர்க்கட்சி/ஆளுங்கட்சி என இருந்தாலும் commission /coruption /கட்டப்பஞ்சாயத்து/நிலஅபகரிப்பு/மோசடிகள் அனைத்தையும் ஒற்றுமையாக பங்குபோட்டுச் செய்கிறார்கள்… 8. இதனை முறியடிக்க மாற்று அரசியல் கண்டிப்பாக வேண்டும்… அதற்கு ஆளுமை/connect/பண ஆசையில்லா/பதவி வெறியற்ற திரு.ரஜினி யின் ஆன்மீக அரசியல் வரவேண்டும் 9.இல்லாவிடில் தமிழகம் தரிசாகி/50ஆண்டுகள் பின்னோக்கி/அழிவுப்பாதையில் சென்றுவிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X