பொது செய்தி

தமிழ்நாடு

8 துணை கலெக்டர் இடம் கலெக்டர் ஆபீசில் காலி

Added : நவ 22, 2020
Share
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில், எட்டு துணை கலெக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், வளர்ச்சி பணிகள் பாதிக்கும் அபாயம் உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், கடந்தாண்டு, இரண்டாக பிரிக்கப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் உருவாக்கப்பட்டது.தற்போது, காஞ்சிபுரத்தில் ஐந்து தாலுகா, ஐந்து ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் நான்கு சட்டசபை தொகுதிகள் மட்டுமே உள்ளன.சிறிய

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில், எட்டு துணை கலெக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், வளர்ச்சி பணிகள் பாதிக்கும் அபாயம் உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், கடந்தாண்டு, இரண்டாக பிரிக்கப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் உருவாக்கப்பட்டது.தற்போது, காஞ்சிபுரத்தில் ஐந்து தாலுகா, ஐந்து ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் நான்கு சட்டசபை தொகுதிகள் மட்டுமே உள்ளன.சிறிய மாவட்டம் என்பதால், வளர்ச்சி பணிக்கு தேவையான அதிகாரிகள், முறையாக நியமிக்கப்படுவதில்லை என, புகார் எழுந்து உ ள்ளது. அதாவது, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில், பல்வேறு துறைகளின் அதிகாரிகளாக, 10க்கும் மேற்பட்ட துணை கலெக்டர்கள் பணியிடங்கள் உள்ளன.

இதில், எட்டு துணை கலெக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன.கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது), ஆயத்தீர்வை துறை உதவி இயக்குனர், கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்), காஞ்சி -திருவள்ளூர் ஆய்வுக்குழு அலுவலர், நில எடுப்பு, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (லீகல்) என, எட்டு துணை கலெக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பணி என்பது, கலெக்டரின் அனைத்து பணிகளிலும் இவரது பங்கு இருக்கும். இந்த பணியிடம் உடனடியாக நிரப்ப வேண்டும்.தேர்தல் பணி துவங்கும் தற்போது, தேர்தல் பிரிவுக்கு, துணை கலெக்டர் இல்லாதது, தேர்தல் பணிகளை தாமதமாக்கும். பி.ஏ., லீகல் என சொல்லப்படும், நீதிமன்ற வழக்குகளை சந்திக்கும் பணியிடமும், ஓராண்டாக காலியாக உள்ளது.இதுபோல், மற்ற துணை கலெக்டர் பணியிடங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன.

காலியாக உள்ள பணியிடங்களை, மற்ற துணை கலெக்டர்கள் கூடுதலாக கவனித்து வருகின்றனர்.கலெக்டர் அலுவலகத்தில் பணிகள் முடங்காமல் இருக்க, எட்டு துணை கலெக்டர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X