பொது செய்தி

தமிழ்நாடு

நீர்த்தேக்கமாகும் காட்டூர் ஏரி

Added : நவ 22, 2020
Share
Advertisement
பொன்னேரி : குடிநீர் ஆதாரம் மற்றும் பாசனத்திற்காக, நீர்த்தேக்கமாக மாற்றப்பட உள்ள காட்டூர் ஏரியில், 0.035 டி.எம்.சி., தண்ணீர் தேங்கி உள்ளது. பொன்னேரி அடுத்த, காட்டூர் கிராமத்தில், பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில், 362 ஏக்கர் பரப்பு பாசன ஏரி உள்ளது.ஏரியில் தேக்கி வைக்கப்படும் மழைநீரால், அருகில் உள்ள விவசாய நிலங்கள் பயன் பெற்று வருகின்றன. ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள

பொன்னேரி : குடிநீர் ஆதாரம் மற்றும் பாசனத்திற்காக, நீர்த்தேக்கமாக மாற்றப்பட உள்ள காட்டூர் ஏரியில், 0.035 டி.எம்.சி., தண்ணீர் தேங்கி உள்ளது.

பொன்னேரி அடுத்த, காட்டூர் கிராமத்தில், பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில், 362 ஏக்கர் பரப்பு பாசன ஏரி உள்ளது.ஏரியில் தேக்கி வைக்கப்படும் மழைநீரால், அருகில் உள்ள விவசாய நிலங்கள் பயன் பெற்று வருகின்றன. ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள லட்சுமிபுரம் அணைக்கட்டில் இருந்து, கால்வாய் மூலம், ஏரிக்கு நீர்வரத்து உள்ளது. தற்போது, 0.058 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட ஏரியில், 0.035 டி.எம்.சி., தண்ணீர் தேங்கி உள்ளது.குடிநீர் ஆதாரம் மற்றும் பாசனத்திற்கு பயன்பெறும் வகையில், காட்டூர் ஏரியை, நபார்டு வங்கி நிதியுதவி மூலம், 65 கோடி ரூபாயில் நீர்த்தேக்கமாக மாற்றப்பட உள்ளது.

இதற்காக, காட்டூர் ஏரியை ஒட்டியுள்ள, 252 ஏக்கர் பரப்பு தத்தமஞ்சி ஏரியுடன் இணைத்து, 614 ஏக்கரில், நீர்த்தேக்கம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஏரியின் கரைகள், 5 - 7 மீட்டர் வரை உயர்த்தப்பட உள்ளன.இதற்கான முதல்கட்ட பணிகளும், கடந்த மாதம் துவங்கப்பட்டன. நீர்த்தேக்கம் அமைவதன் மூலம், மேற்கண்ட ஏரிகளில், 0.35 டி.எம்.சி தண்ணீர் தேக்கி வைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X