பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி

Added : நவ 22, 2020
Share
Advertisement
ரவுடி கொலையில் வாலிபர் கைதுசெங்கல்பட்டு: செங்கல்பட்டு பெரியநத்தம், அன்னை அஞ்சுகம் நகரைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் விமல்குமார், 38. ரவுடி.கடந்த, 20ம் தேதி இரவு, புறவழிச்சாலையில் நடந்து சென்றபோது, மர்ம கும்பலால், வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில், தேடப்படுவதாக கருதி, அ.தி.மு.க., பிரமுகர் பட்டரவாக்கம் சிவா, 40, என்பவர், நேற்று முன்தினம், செங்கல்பட்டு நீதிமன்றத்தில்

ரவுடி கொலையில் வாலிபர் கைதுசெங்கல்பட்டு: செங்கல்பட்டு பெரியநத்தம், அன்னை அஞ்சுகம் நகரைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் விமல்குமார், 38. ரவுடி.கடந்த, 20ம் தேதி இரவு, புறவழிச்சாலையில் நடந்து சென்றபோது, மர்ம கும்பலால், வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில், தேடப்படுவதாக கருதி, அ.தி.மு.க., பிரமுகர் பட்டரவாக்கம் சிவா, 40, என்பவர், நேற்று முன்தினம், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்நிலையில், கொலையில் தொடர்புடைய செங்கல்பட்டு கே.கே.தெருவைச் சேர்ந்த சுரேஷ்குமார், 31, என்ற ரவுடியை, போலீசார் நேற்று கைது செய்தனர். மற்றவர்களை தேடுகின்றனர்.

கஞ்சா கடத்திய இருவர் கைதுகனகம்மாசத்திரம்: ஆந்திர மாநிலம், ஒஜிகுப்பம் பகுதியில் இருந்து, கனகம்மாசத்திரம், ஆற்காடுகுப்பம் வழியாக, கஞ்சா கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கனகம்மாசத்திரம் போலீசார், பூனிமாங்காடு பஸ் நிறுத்தம் அருகே, வாகனச் சோதனை நடத்தினர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரு வாலிபர்களை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அப்போது, வாகனத்தில் வந்த இரு வாலிபர்களிடம், கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், பெருங்களத்துாரைச் சேர்ந்த தீனா, 21, மூர்த்தி, 20, என, தெரிய வந்தது. அதை தொடர்ந்து, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X