உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கி உள்ளதா என்று கண்டுபிடிக்கும் சோதனை கருவிகள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இவற்றுள் பெரும்பாலான சோதனை கருவிகள் சரியான முடிவுகளை காட்டுவதில்லை.

கொரோனா வைரஸ் தாக்கியவர்களுக்கு தாக்கவில்லை என்றும் ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு வைரஸ் தாக்கி உள்ளது என்றும் மாற்றிமாற்றி முடிவுகளை காண்பிக்கிறது. இதனால் இவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்குகிறது. பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும் வகையில் சோதனை கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.ஆனால் இவற்றிலும் சில கோளாறுகள் உள்ளன.
சமீபத்தில் அமெரிக்க தொழில் ஜாம்பவான் எலான் மஸ்க் தன் வீட்டிலேயே ஒரு நாளில் நான்கு முறை பரிசோதனை செய்து கொண்டதாகவும் ஒவ்வொரு முறை பரிசோதனை செய்து கொண்டபோதும் ஒவ்வொரு விதமாக முடிவுகளை சோதனை கருவிகள் காண்பிப்பதாகவும் இதனால் தன்னால் ஒரு முடிவுக்கு வரவில்லை வர முடியவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
இந்தியாவில் ராப்பிட் டெஸ்ட் கிட் அதிக விமர்சனத்தைப் பெற்றது. தற்போது அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி டேனியல் லாரிமோர் கொரோனா சோதனை கருவிகள் குறித்து ஓர் ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

இதனையடுத்து அவர் கூறுகையில்அதிக நம்பகத்தன்மை கொண்ட கருவிகள் என்று நம்பப் படும் கருவிகளை காட்டிலும் உடனுக்குடன் முடிவுகளைத் தெரிந்து கொள்ளும் சாதாரண கருவிகளை நன்றாக வேலை செய்கின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் சோதனைக்கு ஆர்என்ஏ சோதனைக்கு உள்ளாகும். பிசிஆர் சோதனை மூலமாக ஆரணி சோதிக்கப்படும். கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு என்று ஓர் முறை உள்ளது. அதனை ஒழுங்காகப் பின்பற்றினாலே வைரஸ் தாக்கத்தை தெரிந்து கொள்ளலாம். பரிசோதனை கருவியின் துல்லியத் தன்மையை கணிப்பதை விட, குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்போது பரிசோதனை செய்துகொள்வதால் கொரோனா வைரஸின் தாக்கத்தை கண்டறியலாம் என்று அவர் கூறியுள்ளார்.
முடிவுகளை தெரிந்துகொள்ள அதிக காலம் எடுக்கும் பிசிஆர் சோதனைகளை காட்டிலும் உடனுக்குடன் முடிவுகளை தெரிந்துகொள்ள உதவும் சிறிய டெஸ்ட் கீட்கள் நம்பகத்தன்மை மிகுந்ததாக உள்ளன என்று தெரிவித்துள்ளார். உலக மக்கள் அனைவருமே வாரத்துக்கு இருமுறை சோதனை செய்துகொள்வது நல்லது. இவ்வாறு சோதனை எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலமாக எளிதில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை அடையாளம் கண்டு அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறமுடியும். மக்கள் தாங்களாகவே சோதனை செய்துகொண்டு இவ்வாறு சிகிச்சைக்கு சென்றால் கொரோனா பாதிப்பை பெருமளவில் குறைக்கலாம் என்று இந்த ஆராய்ச்சி கூறுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE