தமிழ்நாடு

மாவட்டத்தில் வேலை இழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு! வருவாய் வாய்ப்பின்றி ஏராளமானோர் தவிப்பு

Added : நவ 22, 2020
Share
Advertisement
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக வேலை இழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் வேலை வாய்ப்பு வருவாயின்றி பலர் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா நோய்தொற்று காரணமாக பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த மார்ச் 24 ம் தேதி இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இதனால் தொழில்கள் முடங்கி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக வேலை இழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் வேலை வாய்ப்பு வருவாயின்றி பலர் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா நோய்தொற்று காரணமாக பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த மார்ச் 24 ம் தேதி இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இதனால் தொழில்கள் முடங்கி பலர் வேலை வாய்ப்பு இழக்கும் நிலை ஏற்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மனிதவளம் அதிகம் என்பதால் இங்கிருந்து சென்று பல்வேறு மாநிலங்களுக்கு சென்றவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.

இவர்களில் பெரும்பாலானோர் வேலை இழந்து கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் பல தொழில்கள் இன்னும் பழைய நிலைக்கு திரும் பவில்லை. வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்றவர்கள் பெரும்பாலோனோர் பணி செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.கடந்த 8 மாதங்களாக சம்பளம் இன்றி அறைகளிலேயே முடங்கிக் கிடப்பதாக வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்ற பலரிடமிருந்து வரும் தகவல் இங்குள்ள அவர்களின் குடும்பத்தாரை கவலையடையச் செய்துள்ளது.

அதேபோல் இங்கு விவசாய பணிகளை தவிர மற்ற எந்த தொழிலும் பழைய நிலைக்குத் திரும்பவில்லை. பொருளாதார வீழ்ச்சியால் கட்டுமான பணிகள் தொய்வடைந்த நிலையில் உள்ளது.குறிப்பாக வீடு கட்டும் தொழில் கடும் சரிவை சந்தித்துள்ளது.அதைச் சார்ந்து இருக்கக்கூடிய தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்து தவிக்கின்றனர்.குறிப்பாக இளைஞர்களின் நிலை பரிதாபத்திற்கு உரியதாக உள்ளது.பெருநிறுவனங்கள் முதல் சிறிய கடைகள் வரை ஆட்குறைப்பு செய்துள்ளதால் இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர். பல இடங்களில் சம்பளம் குறைந்து வழங்குகின்றனர்.தனியார் பள்ளிகள், கல்லூரிகள், தியேட்டர், திருமண மண்டபம், ஓட்டல்கள், திருவிழாக்கள், சுற்றுலா தலம் உள்ளிட்டவை இன்னும் பழைய நிலைக்கு திரும்ப முடியாத படுமோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் தனி மனித வருவாய் குறைந்து அதிலிருந்து மீண்டு வர வழிதெரியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.வேறு வழியின்றி பணத்திற்காக பலர் நகைகளை அடகு வைப்பது கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது.அதேபோல் அதிக வட்டிக்கு பணத்தை கடன் வாங்கும் நிலைக்கு பலர் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் கிடைத்த வேலையை செய்ய பலர் தயாராக இருந்த போதிலும் அவர்களுக்கு வேலை கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளது.இச்சூழ்நிலையில் குற்றச் சம்பவங்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.வேலையின்றி தவிக்கும் இளைஞர்கள் சிலர் போதைக்கு அடிமையாவது, சூதாட்டங்களில் நேரத்தை செலவிடுவது அதிகரித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாத சிலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் நடந்துள்ளன.இந்த இக்கட்டான சூழ்நிலையில் வேலை இழந்து தவிப்பவர்களுக்கு வருவாய் ஈட்ட மாற்று ஏற்பாடுகளை அரசு செய்து தர வேண்டும்.பல மாதங்களாக வருவாய் இன்றி மனரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்கிடவேண்டும்.

அதேபோல் தவறான பாதையில் செல்பவர்களை தடுத்து அவர்களுக்கு உரிய வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அரசின் கடமையாகும்.தற்போது மாவட்டத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வருவது ஆறுதலாக இருந்தாலும் உலக அளவில் கொரோனா தாக்கம் குறைந்தால் மட்டுமே அனைவரும் பழைய நிலைக்கு திரும்ப முடியும்.அதுவரை பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள ஏழை குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது.

நமது நிருபர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X