ராகுலின் 'டிஜிட்டல்' திட்டம்

Updated : நவ 24, 2020 | Added : நவ 22, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
பீஹார் சட்டசபை தேர்தல் மற்றும் பல மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, காங்கிரசின் மூத்த தலைவர்கள் சிலர், கட்சி மேலிடத்தை விமர்சிக்க துவங்கியுள்ளனர். இதில் நம்ம ஊர் சிதம்பரமும் சேர்ந்துவிட்டார். இதையெல்லாம் பொருட்படுத்தாமல், வழக்கம் போல் புதிய திட்டத்தில் இறங்கிஉள்ளார் ராகுல். அடுத்த ஆண்டு ஜனவரியில், காங்., மாநாடு நடத்தப்பட உள்ளது.
Congress, Rahul, Rahul Gandhi, ராகுல், காங்கிரஸ், ராகுல் காந்தி

பீஹார் சட்டசபை தேர்தல் மற்றும் பல மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, காங்கிரசின் மூத்த தலைவர்கள் சிலர், கட்சி மேலிடத்தை விமர்சிக்க துவங்கியுள்ளனர். இதில் நம்ம ஊர் சிதம்பரமும் சேர்ந்துவிட்டார்.

இதையெல்லாம் பொருட்படுத்தாமல், வழக்கம் போல் புதிய திட்டத்தில் இறங்கிஉள்ளார் ராகுல். அடுத்த ஆண்டு ஜனவரியில், காங்., மாநாடு நடத்தப்பட உள்ளது. இதில் அடுத்த காங்., தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த தேர்தலை, 'டிஜிட்டல்'முறையில் நடத்த ராகுல் திட்டமிட்டுள்ளார்.

புதிய தலைவரை, நாடு முழுதும் உள்ள, 1,500 அகில இந்திய காங்., உறுப்பினர்கள் ஓட்டளித்து தேர்வு செய்வர். இந்த, 1,500 பேருக்கும், ஒரு அட்டை வழங்கப்படும். அதில், 'பார் கோடும்' உண்டு. இதன் வாயிலாக, உறுப்பினரின் மொத்த ஜாதகமும் தெரிந்து விடும். டிஜிட்டல் முறையில் தேர்தல் நடந்தால், குளறுபடிகள் குறைந்துவிடும் என்பதால், இந்த திட்டமாம். இதை அமல்படுத்த ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதில், தமிழகத்தைச் சேர்ந்த, எம்.பி., ஜோதிமணியும் உறுப்பினராக உள்ளார். ராகுல் தான், மீண்டும் தலைவராக வருவார் என்பது அனைவருக்கும் தெரியும்; இருப்பினும், சட்டப்படி தேர்தல் நடத்த வேண்டும். 'கட்சியின் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தாமல், டிஜிட்டல் முறையில் உட்கட்சி தேர்தலை நடத்துவதில் என்ன பயன்' என, புலம்புகின்றனர், மூத்த தலைவர்கள்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
23-நவ-202021:21:10 IST Report Abuse
sankaseshan ஜோதிமணி இருப்பதால் கவலையே வேண்டாம் காங்கிரசை ஒருவழி பண்ணி விடுவார் .
Rate this:
Cancel
23-நவ-202019:50:42 IST Report Abuse
gopalakrishna kadni எல்லா பார்கோடும் ஒருத்தருக்கே ஓட்டு போடறமாதிரி செஞசிட்டா போச்சு....
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
23-நவ-202019:18:24 IST Report Abuse
siriyaar சச்சின் பைலட் அடுத்த தலைவராக நியமிக்க படுவார், அவர் மன்மோகனைப்போல் சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்ப்பு சோனியாவிடம் இருந்தாலும் எப்படி பொறுமையாக மாறுவார் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X