பொது செய்தி

தமிழ்நாடு

புகைப்படங்கள் ஒப்பீடு நிகழ்வு 10 வழக்குகளுக்கு முற்றுப்புள்ளி

Added : நவ 22, 2020
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் அடையாளம் தெரியாத உடல்களை புகைப்படங்களுடன் ஒப்பீடு செய்யும் நிகழ்வு நேற்று நடந்தது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2013ம் ஆண்டு முதல் தற்போது வரை காணாமல் போனது தொடர்பாக பதியப்பட்டுள்ள வழக்குகளில், சிலரை கண்டு பிடிக்க முடியவில்லை. எனவே, எஸ்.பி., ஜியாவுல்ஹக் உத்தரவு படி மாவட்ட குற்ற ஆவண பிரிவு காப்பகத்தில்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் அடையாளம் தெரியாத உடல்களை புகைப்படங்களுடன் ஒப்பீடு செய்யும் நிகழ்வு நேற்று நடந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2013ம் ஆண்டு முதல் தற்போது வரை காணாமல் போனது தொடர்பாக பதியப்பட்டுள்ள வழக்குகளில், சிலரை கண்டு பிடிக்க முடியவில்லை. எனவே, எஸ்.பி., ஜியாவுல்ஹக் உத்தரவு படி மாவட்ட குற்ற ஆவண பிரிவு காப்பகத்தில் பதிவாகியுள்ள, இறந்து அடையாளம் தெரியாத நபர்களின் பிரேத புகைப்படங்களை, திரையில் காட்டி நேற்று ஒப்பீடு செய்யும் நிகழ்வு நேற்று நடந்தது. டி.எஸ்.பி., ராமநாதன் முன்னிலையில் நிகழ்வுக்கு வந்தவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டது.

மாவட்டத்தில் 52 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், 37 வழக்குகளில் சம்மந்தப்பட்ட குடும்பத்தினர் வந்திருந்தனர். இதில் 9 வழக்குகளில் காணாமல் போன நபரகள் உயிருடன் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். பல்வேறு பிரேத புகைப்படங்களை திரையில் காட்டியதில், அதில் இருந்த அடையாளத்தை வைத்து, ஒருவரது உடல் என கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 10 வழக்குகள் நேற்று முடிவுக்கு வந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X