பொது செய்தி

தமிழ்நாடு

புதிய கட்டடம் பகுதியில் மின்பாதை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டுகோள்

Added : நவ 22, 2020
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில், புதிய கட்டடம் அருகே மின்பாதை இருந்தால், மாற்றியமைத்து கட்டட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.இது குறித்து உதவி செயற்பொறியாளர் குமரேசன் விடுத்துள்ள செய்தி குறிப்பு;கள்ளக்குறிச்சி கோட்ட பகுதிகளில் புதியதாக வீடு மற்றும் கடை கட்டுவதற்கு தற்காலிக மின் இணைப்பு பெற்றுக் கொண்டு கட்டுமான பணிகள்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில், புதிய கட்டடம் அருகே மின்பாதை இருந்தால், மாற்றியமைத்து கட்டட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உதவி செயற்பொறியாளர் குமரேசன் விடுத்துள்ள செய்தி குறிப்பு;கள்ளக்குறிச்சி கோட்ட பகுதிகளில் புதியதாக வீடு மற்றும் கடை கட்டுவதற்கு தற்காலிக மின் இணைப்பு பெற்றுக் கொண்டு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.உயர்மின் அழுத்தம் மற்றும் தாழ்வழுத்த மின் பாதைக்கு மிக அருகாமையில் பாதுகாப்பு இன்றி புதிய கட்டட பணிகள் செய்யும் போது, மின் விபத்துடன் அடிக்கடி உயிழிப்பும் ஏற்படுகிறது

எனவே, உயர்மின் அழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் பாதைகளை மாற்றி அமைக்க மின்வாரிய அலுவலகத்திற்கு முறையாக விண்ணப்பித்து, மின்பாதைகளை மாற்றி அமைத்த பின்னரே கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.தவறும்பட்சத்தில், அதனால் ஏற்படும் மின் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளுக்கு அந்த கட்டட உரிமையாளரே முழு பொறுப்பு ஏற்க நேரிடும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி உதவி செயற்பொறியாளர் குமரேசன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X