பொது செய்தி

தமிழ்நாடு

பாலியல் குற்ற தடுப்பு நடவடிக்கை கிராம மக்களிடையே விழிப்புணர்வு

Added : நவ 22, 2020
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : தென்கீரனுார் கிராமத்தில் கொரோனா மற்றும் பாலியல் குற்ற தடுப்பு நடவடிக்கை குறித்து மகளிர் போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் தென்கீரனுார் கிராமத்தில் கொரோனா மற்றும் பாலியல் குற்ற தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்

கள்ளக்குறிச்சி : தென்கீரனுார் கிராமத்தில் கொரோனா மற்றும் பாலியல் குற்ற தடுப்பு நடவடிக்கை குறித்து மகளிர் போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் தென்கீரனுார் கிராமத்தில் கொரோனா மற்றும் பாலியல் குற்ற தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார்.இதில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என்று அறிவுரை வழங்கி பொதுமக்களுக்கு முககவசம் வழங்கினர்.

மேலும், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை, தண்டனைகள், பாலியல் சம்பந்தப்பட்ட புகார் அளிப்பது தொடர்பான விவரங்கள், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் மொபைல் பயன்பாட்டினை குழந்தைகளுக்கு தெரிவிப்பது போன்றவை குறித்து பொதுமக்களிடையே எடுத்துரைத்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில், அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X