பொது செய்தி

தமிழ்நாடு

முடியனுார் கைலாசநாதர் கோவிலில் உழவாரப்பணி

Added : நவ 22, 2020
Share
Advertisement
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அடுத்த முடியனுார் கிராமத்தில் இருக்கும் கைலாசநாதர் கோவிலில், தொண்ட உழவர் திருக்கூட்டம் சார்பில் உழவார பணி மேற்கொள்ளப்பட்டது.திருக்கோவிலுார் அடுத்த முடியனுார் கிராமத்தில் மிகப்பழமையான கைலாசநாதர் திருக்கோவில் உள்ளது. இதனை தொண்ட உழவர் திருக்கூட்டம் அறக்கட்டளை தலைவர் சிவபாலன் தலைமையிலான சிவனடியார்கள் பலரும் கலந்து கொண்டு,

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அடுத்த முடியனுார் கிராமத்தில் இருக்கும் கைலாசநாதர் கோவிலில், தொண்ட உழவர் திருக்கூட்டம் சார்பில் உழவார பணி மேற்கொள்ளப்பட்டது.

திருக்கோவிலுார் அடுத்த முடியனுார் கிராமத்தில் மிகப்பழமையான கைலாசநாதர் திருக்கோவில் உள்ளது. இதனை தொண்ட உழவர் திருக்கூட்டம் அறக்கட்டளை தலைவர் சிவபாலன் தலைமையிலான சிவனடியார்கள் பலரும் கலந்து கொண்டு, நேற்று உழவாரப் பணி மேற்கொண்டனர்.

முன்னதாக கோவில் விரைவில் திருப்பணி நடைபெற்று, குடமுழுக்கு விழா நடைபெற இறைவனிடம் விண்ணப்பம் செய்து, திருமுறைகள் பாடி வழிபாடு செய்யப்பட்டது.தகடி கிராமத்தைச் சேர்ந்த சிவ ஐயப்பன் உள்ளிட்ட கிராம பொதுமக்கள், சிவனடியார்கள் உழவாரப்பணி திருக்கூட்டத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X