பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் சிறப்பு முகாம் கட்சியினர் ஆர்வம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
செங்கல்பட்டு : ஏழு சட்டசபை தொகுதிக்குட்பட்ட அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், புதிய வாக்காளர்களைச் சேர்க்க, அரசியல் கட்சியினர் ஆர்வம் காட்டினர். செங்கல்பட்டு மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்காக, இம்மாதம், 16ம் தேதி, விரைவு வாக்காளர் பட்டியலை, மாவட்ட வருவாய் அலுவலர் ப்ரியா வெளியிட்டார். இந்நிலையில், பொதுமக்கள் நலன்கருதி, மாவட்டத்தில், சோழிங்கநல்லுார்,

செங்கல்பட்டு : ஏழு சட்டசபை தொகுதிக்குட்பட்ட அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், புதிய வாக்காளர்களைச் சேர்க்க, அரசியல் கட்சியினர் ஆர்வம் காட்டினர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்காக, இம்மாதம், 16ம் தேதி, விரைவு வாக்காளர் பட்டியலை, மாவட்ட வருவாய் அலுவலர் ப்ரியா வெளியிட்டார். இந்நிலையில், பொதுமக்கள் நலன்கருதி, மாவட்டத்தில், சோழிங்கநல்லுார், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம், செய்யூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், நேற்று முன்தினம், மற்றும் நேற்று நடந்தது.

இதில், வாக்காளர் சேர்ப்பு, நீக்கம், பிழை திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய கோரி, வாக்காளர்கள் மனுக்கள் அளித்தனர்.பல்லாவரம், தாம்பரம் ஆகிய சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதி பள்ளிகளில் நடந்த வாக்காளர் சிறப்பு முகாமை, மாவட்ட வருவாய் அலுவலர் ப்ரியா, நேரில் சென்று ஆய்வு செய்தார்.ஏழு சட்டசபை தொகுதிகளிலும், தி.மு.க., - அ.தி.மு.க.,வினர், 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்களை, வாக்காளர் பட்டியல் சேர்க்க, ஆர்வமாய் இருந்தனர்.

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டத்தில், 10 சட்டசபை தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல், கடந்த, 16ம் தேதி கலெக்டர் பொன்னையா வெளியிட்டார்.இதன்படி, 10 சட்டசபை தொகுதிகளில், ஆண் வாக்காளர், 16 லட்சத்து, 73 ஆயிரத்து, 293; பெண் வாக்காளர், 17 லட்சத்து, 4 ஆயிரத்து, 473; இதரர், 735, என, மொத்தம், 33 லட்சத்து, 78 ஆயிரத்து, 501 வாக்காளர் இடம் பெற்று உள்ளனர்.சிறப்பு முகாம்வரைவு வாக்காளர் பட்டியல், 3,622 ஓட்டுச்சாவடிகள், 1,205 பள்ளிகளில், பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

புதிய வாக்காளர் சேர்ப்பு, மாற்றம் செய்ய விரும்புவோருக்கான, சிறப்பு முகாம் அனைத்து, ஓட்டுச்சாவடிகளிலும், நேற்று முன்தினம் மற்றும் நேற்று, இரண்டு நாட்கள், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் நடந்தன.மேலும், வரும், டிச.,12 மற்றும் 13ம் தேதிகளிலும், சிறப்பு முகாம் நடைபெறும். அதன் பின், இறுதி வாக்காளர் பட்டியல், வரும் ஜனவரி மாதம் வெளியாகும் என, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X