பொது செய்தி

தமிழ்நாடு

காணாமல் போனவர்களை

Added : நவ 22, 2020
Share
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் துணை காவல் கோட்டங்களுக்குட்பட்ட பகுதிகளில், காணாமல் போனவர்களை கண்டறியும் சிறப்பு முகாம், நேற்று, காஞ்சிபுரத்தில் நடந்தது. காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் காவல் துணை கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில், 10 ஆண்டுகளில் காணாமல் போனதாக நிலுவை வழக்கில் உள்ளவர்களை கண்டறிய, நேற்று, சிறப்பு முகாம் நடந்தது. காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி.,

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் துணை காவல் கோட்டங்களுக்குட்பட்ட பகுதிகளில், காணாமல் போனவர்களை கண்டறியும் சிறப்பு முகாம், நேற்று, காஞ்சிபுரத்தில் நடந்தது.

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் காவல் துணை கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில், 10 ஆண்டுகளில் காணாமல் போனதாக நிலுவை வழக்கில் உள்ளவர்களை கண்டறிய, நேற்று, சிறப்பு முகாம் நடந்தது. காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி., சாமுண்டீஸ்வரி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொன்ராம், ஸ்ரீபெரும்புதுார் உதவி காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், காஞ்சிபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் மணிமேகலை மற்றும் அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.

முகாமில், சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என, ஒவ்வொரு பிரிவாக, காவல் துறையிடம் இருக்கும் புகைப்படங்களை, பெரிய திரையில் உறவினர்களுக்கு காண்பித்தனர். இதில், அவர்களின் உறவினர்கள், 80 பேரை வரவழைத்து, அடையாளம் தெரியாத இயற்கை மரணம், விபத்து, தற்கொலை செய்து கொண்டவர்களின் புகைப்படங்கள் காட்டப்பட்டன. புகைப்படங்களில், சரியாக அடையாளம் தெரியாததால், யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை என, முகாமில் பங்கேற்றவர்கள் கூறினர்.டி.ஐ.ஜி., சாமுண்டீஸ்வரி கூறியதாவது மாவட்டத்தில், 2010ல் இருந்து, 134 பேர், காணாமல் போனதாக வழக்கு நிலுவையில் உள்ளன. அடையாளம் தெரியாமல் இறந்து போனவர்கள் அல்லது காணாமல் போனவர்களை கண்டறிந்து, கூடிய விரைவில், இதற்கு தீர்வு காணப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X