பொது செய்தி

தமிழ்நாடு

சிறு பாலம் சீரமைப்பு

Added : நவ 22, 2020
Share
Advertisement
மணவாள நகர் : நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, மணவாள நகர் பகுதியில், சேதமடைந்த சிறு பாலத்தை, ஊராட்சி நிர்வாகம் சீரமைத்தது. கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்டது மணவாள நகர். இங்கு, 10க்கும் மேற்பட்ட நகர்கள் மற்றும் 40க்கும் மேற்பட்ட தெருக்களில், 10 ஆயிரத்துக்கும் குடியிருப்புகள் உள்ளன.இதில், வரதராஜன் தெரு, ராதாகிருஷ்ணன் தெரு, ஓண்டிக்குப்பம்

மணவாள நகர் : நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, மணவாள நகர் பகுதியில், சேதமடைந்த சிறு பாலத்தை, ஊராட்சி நிர்வாகம் சீரமைத்தது.

கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்டது மணவாள நகர். இங்கு, 10க்கும் மேற்பட்ட நகர்கள் மற்றும் 40க்கும் மேற்பட்ட தெருக்களில், 10 ஆயிரத்துக்கும் குடியிருப்புகள் உள்ளன.இதில், வரதராஜன் தெரு, ராதாகிருஷ்ணன் தெரு, ஓண்டிக்குப்பம் உட்பட பல தெருக்களில் சிறு பாலங்கள் சேதமடைந்திருந்தன.இதனால், இவ்வழியே வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர்.இது குறித்தான செய்தி வெளியானதையடுத்து, ஊராட்சி நிர்வாகத்தினர் சேதமடைந்த சிறு பாலங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.இதேபோல், குடியிருப்பு பகுதிகளில், காலி மனைகளில் குப்பை மற்றும் கழிவுநீரையும் அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X