பொது செய்தி

தமிழ்நாடு

திரவ உரங்களை பயன்படுத்த வேளாண் துறை வேண்டுகோள்

Added : நவ 22, 2020
Share
Advertisement
திருவள்ளூர் : ரசாயன உரம் தவிர்த்து, திரவ உரம் பயன்படுத்துமாறு, வேளாண் துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். திருவள்ளூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர், சம்பத்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ரசாயன உரத்தினை தொடர்ந்து பயன்படுத்துவதால், மண்ணின் தன்மை மாறுபாடடைந்து, மண்வளம் குன்றுகிறது. மண்ணில் உள்ள, நுண்ணுயிர் அழிகின்றன.இவற்றை தவிர்க்க, உயிர் உரம் மற்றும் அங்க

திருவள்ளூர் : ரசாயன உரம் தவிர்த்து, திரவ உரம் பயன்படுத்துமாறு, வேளாண் துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர், சம்பத்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ரசாயன உரத்தினை தொடர்ந்து பயன்படுத்துவதால், மண்ணின் தன்மை மாறுபாடடைந்து, மண்வளம் குன்றுகிறது. மண்ணில் உள்ள, நுண்ணுயிர் அழிகின்றன.இவற்றை தவிர்க்க, உயிர் உரம் மற்றும் அங்க உரங்களை பயன்படுத்துவதன் மூலம், மண்ணின் உயிரியல் செயல்பாட்டை அதிகப்படுத்தி, மண்வளத்தை பாதுகாக்கலாம்.திருவள்ளூர் மாவட்டம், புழல் வட்டத்தில், திரவ உயிர் உரம் உற்பத்தி மையம், செயல்பட்டு வருகிறது.

இம்மையத்தில், இந்த ஆண்டு, 60 ஆயிரம் லிட்டர் உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அசோஸ்பைரில்லம், ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா, அசோபாஸ், பொட்டாஷ் பாக்டீரியா என, ஏழு வகையான திரவ உயிர் உரம் தயாரிக்கப்பட்டு உள்ளது.திருவள்ளூர், காஞ்சி புரம், செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண் விரிவாக்க மையம் மூலம் வினியோகிக்கப்பட்டு வருகிறது.எனவே, விவசாயிகள், ரசாயன உரங்களை குறைத்து, திட மற்றும் திரவ உயிர் உரங்களை பயன்படுத்தி, மண்வளம் காத்து, அதிக மகசூல் பெற்று பயனடையலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X