பொது செய்தி

தமிழ்நாடு

மூடப்பட்ட வார சந்தையை மீண்டும் துவக்க கோரிக்கை

Added : நவ 22, 2020
Share
Advertisement
பெண்ணாடம் : கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட வார சந்தையை மீண்டும் துவக்க வேண்டும் என பெண்ணாடம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பெண்ணாடம் புதிய பஸ் நிலையத்தில் பேரூராட்சி சார்பில், வார சந்தை இயங்கி வந்தது. இதனைப் பயன்படுத்தி, தி.அகரம், வடகரை, நந்திமங்கலம், பெ.பொன்னேரி, மாளிகைக்கோட்டம், அரியராவி, பெ.பூவனுார், கொசப்பள்ளம் மற்றும் அரியலுார் மாவட்ட கிராம மக்கள்

பெண்ணாடம் : கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட வார சந்தையை மீண்டும் துவக்க வேண்டும் என பெண்ணாடம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெண்ணாடம் புதிய பஸ் நிலையத்தில் பேரூராட்சி சார்பில், வார சந்தை இயங்கி வந்தது. இதனைப் பயன்படுத்தி, தி.அகரம், வடகரை, நந்திமங்கலம், பெ.பொன்னேரி, மாளிகைக்கோட்டம், அரியராவி, பெ.பூவனுார், கொசப்பள்ளம் மற்றும் அரியலுார் மாவட்ட கிராம மக்கள் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வாங்கி பயனடைந்தனர்.கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பொது மக்களின் பாதுகாப்பு கருதி, கடந்த 8 மாதங்களாக வார சந்தை மூடப்பட்டது. தற்போது ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டுள்ளது.

இதுவரை வார சந்தை பெண்ணாடத்தில் துவங்காததால் பொது மக்கள் காய்கறிகள் வாங்க மிகுந்த சிரமம் அடைகின்றனர். மேலும், காய்கறிகளின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.எனவே, பெண்ணாடத்தில் மூடப்பட்ட வார சந்தையை மீண்டும் துவக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X