பொது செய்தி

தமிழ்நாடு

புத்தாக்க திட்ட பயிற்சி முகாம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
கடம்பத்துார் : கடம்பத்துார் ஒன்றிய அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின்கீழ், பயிற்சி முகாம் நடந்தது. ஊரகப் புத்தாக்கத் திட்ட கடம்பத்துார் ஒன்றிய அணி தலைவர் அருள்குமார், திட்டக் குழு செயலர் புனிதவள்ளி ஆகியோர் முன்னிலை வகிக்க, சப் - கலெக்டர் முருகன், முகாமிற்கு, தலைமை வகித்தார்.இதில், சப் - கலெக்டர் முருகன்

கடம்பத்துார் : கடம்பத்துார் ஒன்றிய அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின்கீழ், பயிற்சி முகாம் நடந்தது.

ஊரகப் புத்தாக்கத் திட்ட கடம்பத்துார் ஒன்றிய அணி தலைவர் அருள்குமார், திட்டக் குழு செயலர் புனிதவள்ளி ஆகியோர் முன்னிலை வகிக்க, சப் - கலெக்டர் முருகன், முகாமிற்கு, தலைமை வகித்தார்.இதில், சப் - கலெக்டர் முருகன் பேசுகையில், 'ஊரக சமுதாயத்தில் வறுமை ஒழிப்பு என்னும் செயல்பாட்டையும் தாண்டி தொழில் மேம்பாடு மூலம் வளத்தையும், அதன் நிலைத்த தன்மையையும் உருவாக்குவது குறித்தும், அதன் மூலம் ஊரகப் பகுதிகளில், பெரும் மாற்றத்தையும், வளர்ச்சியையும் ஏற்படுத்துவது குறித்தும் பேசினார்.

மேலும், ஊராட்சி பகுதிகளில், ஊரகத் தொழில் முனைவுகள் உருவாக்குதல், நிதி சேவைகளுக்கு வழி வகுத்தல் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் குறித்து, காணொலி காட்சி மூலம்' விளக்கினார்.இதில், 30க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X