காணாமல் போனவர் புகைப்பட காட்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காணாமல் போனவர் புகைப்பட காட்சி

Added : நவ 22, 2020
Share
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் நோக்கில் உறவினர்களுக்கு புகைப்பட காட்சி காண்பிக்கும் நிகழ்ச்சி காவலர் திருமண மண்டபத்தில் நடந்தது.கடலுார் எஸ்.பி., ஸ்ரீ அபிநவ் வழிகாட்டுதலின்படி, கடலுார் மாவட்டத்தில் காணாமல் போன நபர்களை கண்டுபிடிக்கும் நோக்கில் அடையாளம் தெரியாத இறந்து போனவர்களின் புகைப்படம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில்

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் நோக்கில் உறவினர்களுக்கு புகைப்பட காட்சி காண்பிக்கும் நிகழ்ச்சி காவலர் திருமண மண்டபத்தில் நடந்தது.

கடலுார் எஸ்.பி., ஸ்ரீ அபிநவ் வழிகாட்டுதலின்படி, கடலுார் மாவட்டத்தில் காணாமல் போன நபர்களை கண்டுபிடிக்கும் நோக்கில் அடையாளம் தெரியாத இறந்து போனவர்களின் புகைப்படம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் அடையாளம் தெரியாத இறந்து போனவர்களின் புகைப்படம் சேகரிக்கப்பட்டு 'ஸ்லைடு' மூலம் காண்பிக்கப்பட்டது. மொத்தம் 3775 புகைப்படங்கள் காணாமல் போனவர்களின் குடும்பத்தாருக்கு காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏ.எஸ்.பி., அங்கிட் ஜெயின், டி.எஸ்.பி.,கள் சாந்தி, கங்காதரன், ஆய்வாளர்கள் ஈஸ்வரி, சித்ரா, ஏட்டு சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X