பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் வெளியில் தரிசனம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், கடை ஞாயிறு திருவிழா ரத்தானதால், கோவில் வெளியில், பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாதம், ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும், கடை ஞாயிறு திருவிழா நடைபெறும்.நடப்பாண்டு கார்த்திகையில், நேற்று முதல் ஞாயிறு என்பதால், ஏராளமான பக்தர்கள் தங்கள், நேர்த்திக்கடனை செலுத்த,

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், கடை ஞாயிறு திருவிழா ரத்தானதால், கோவில் வெளியில், பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாதம், ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும், கடை ஞாயிறு திருவிழா நடைபெறும்.நடப்பாண்டு கார்த்திகையில், நேற்று முதல் ஞாயிறு என்பதால், ஏராளமான பக்தர்கள் தங்கள், நேர்த்திக்கடனை செலுத்த, கோவிலுக்கு வந்தனர். ஆனால், கொரோனா தொற்று காரணமாக, அரசு அறிவிப்புபடி, இவ்விழா ரத்து செய்யப்பட்டது.இதையறியாமல் வந்த சுற்றுப்புற கிராமத்தினர், கோவிலுக்கு வெளியே, தேங்காய் உடைத்து, மாவிளக்கு ஏற்றி, சுவாமி தரிசனம் செய்தனர்.

அர்ச்சகரை தவிர, மற்றவர்களை கோவிலுக்கு உள்ளே அனுமதிக்காததால், பலர், வெளி பிரகாரத்தைச் சுற்றி வந்தனர்.அதேபோல், சோமவார வழிபாட்டுக்கும், பக்தர்கள் வருவதை தவிர்க்கும் வகையில், கார்த்திகை மாதம், நான்கு ஞாயிறு, திங்கட்கிழமைகளில், கோவில் நடை சாத்தப்படுவதாக, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து, கோவில் வாசல் வெளியில், அறிவிப்பு பலகை யும் வைக்கப்பட்டுஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X