பொது செய்தி

தமிழ்நாடு

* போலீஸ் டைரி

Added : நவ 22, 2020
Share
Advertisement
மயங்கி விழுந்தவர் பலிஊத்துக்கோட்டை: எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில், ஒருவர் மயங்கிய நிலையில் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.பெரியபாளையம் போலீசார் சென்று பார்த்தபோது, 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் மயங்கி நிலையில் இருந்தார். சிகிச்சைக்காக, '108 ஆம்புலன்ஸ்' மூலம், திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு,

மயங்கி விழுந்தவர் பலிஊத்துக்கோட்டை: எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில், ஒருவர் மயங்கிய நிலையில் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.பெரியபாளையம் போலீசார் சென்று பார்த்தபோது, 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் மயங்கி நிலையில் இருந்தார். சிகிச்சைக்காக, '108 ஆம்புலன்ஸ்' மூலம், திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் நேற்று இறந்தார். பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

விபத்தில் ஒருவர் பலிதிருவள்ளூர்: திருவள்ளூர், பெரியகுப்பம், காமராஜபுரத்தைச் சேர்ந்தவர், துரைசாமி மகன் கன்னியப்பன், 58. இவர், கடந்த, 15ம் தேதி, இருசக்கர வாகனத்தில், வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். ஆயில் மில் அருகில் சென்ற போது, நாய் திடீரென குறுக்கே வந்தது.இதனால் தடுமாறி விழுந்ததில், தலையில் பலத்த காயமடைந்து, சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து, திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X