பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்...

Added : நவ 22, 2020
Share
Advertisement
கல் மண்டபம் பிரதிஷ்டைஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அருகே பால்நல்லுார் கிராமத்தில், பரஞ்ஜோதி பாபா ஜீவ சமாதி உள்ளது.இங்கு, மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் நடக்கும் சிறப்பு வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள், தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த ஆலயத்தில், புதிதாக கல் மண்டபம் அமைக்கப்பட்டது. இதில், பரஞ்சோதி பாபாவின், புதிய ஐம்பொன் சிலை, நேற்று

கல் மண்டபம் பிரதிஷ்டைஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அருகே பால்நல்லுார் கிராமத்தில், பரஞ்ஜோதி பாபா ஜீவ சமாதி உள்ளது.இங்கு, மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் நடக்கும் சிறப்பு வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள், தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த ஆலயத்தில், புதிதாக கல் மண்டபம் அமைக்கப்பட்டது. இதில், பரஞ்சோதி பாபாவின், புதிய ஐம்பொன் சிலை, நேற்று முன்தினம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

அ.தி.மு.க.,வில் உறுப்பினர் சேர்க்கைகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் அ.தி.மு.க., சார்பில், பல்வேறு இடங்களில், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. நேற்று, காஞ்சிபுரம் காவலான்கேட் பகுதியில், 31வது வட்டம் சார்பில், புதிய உறுப்பினர் சேர்க்கை நடந்தது.மாவட்ட செயலர் சோமசுந்தரம், முன்னாள் செயலர் கணேசன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்ட புதிய உறுப்பினர்களுக்கு, அடையாள அட்டை வழங்கப்பட்டது.நிர்வாகிகள் தேர்தல்திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் கிளையின், தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்க தேர்தல் மற்றும் பொதுக்குழு கூட்டம், கேளம்பாக்கத்தில் நடந்தது.மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். கிளை செயலர் சக்திவேல் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக, மாநில துணை பொதுச்செயலர் தனசேகரன் பங்கேற்றார்.கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், நாவிதர் மருத்துவர் சமுதாயத்திற்கு, 5 சதவீதம் உள் ஒதுக்கீட்டை, அரசு வழங்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தேர்தல் நடத்தி, நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X