பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி

Added : நவ 22, 2020
Share
Advertisement
சாலை விபத்தில் சிறுவன் பலிவெள்ளவேடு: காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ஆனந்தஜோதி, 38. இவர், நேற்று முன்தினம், மனைவி கனகதுர்கா மற்றும் மகன் ரித்தீஷ், 8, ஆகியோருடன், 'ஹோண்டா ஷைன்' டூ - வீலரில், வண்டலுார் வெளிவட்ட சாலையில், காவல்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, காவல்சேரி அருகே வந்த போது, வெளிவட்ட சாலையில் எவ்வித

சாலை விபத்தில் சிறுவன் பலிவெள்ளவேடு: காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ஆனந்தஜோதி, 38. இவர், நேற்று முன்தினம், மனைவி கனகதுர்கா மற்றும் மகன் ரித்தீஷ், 8, ஆகியோருடன், 'ஹோண்டா ஷைன்' டூ - வீலரில், வண்டலுார் வெளிவட்ட சாலையில், காவல்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது, காவல்சேரி அருகே வந்த போது, வெளிவட்ட சாலையில் எவ்வித அறிவிப்புமின்றி நின்று கொண்டிருந்த, 'ஈச்சர்' லாரியின் பின்பக்கம், டூ - வீலர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், டூ - வீலரில் இருந்த சிறுவன் ரித்தீஷ் இறந்தான். படுகாயமடைந்த ஆனந்தஜோதி மற்றும் கனகதுர்கா ஆகிய இருவரும் படுகாயமடைந்து, சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுகுறித்து, வெள்ளவேடு போலீசில், சகோதரர் கிருஷ்ணராஜ் அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

குளத்தில் விழுந்த சிறுமி பலிமப்பேடு: கடம்பத்துார் ஒன்றியம், மப்பேடு கிராமம், கே.கே.நகரைச் சேர்ந்தவர் லாரன்ஸ், 43. கூலி வேலை செய்து வரும் இவருக்கு, யாசினி, 12, யாமினி, 10, என, இரு மகள்கள் உள்ளனர்.நரசமங்களம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வந்த யாசினி, நேற்று முன்தினம், வீட்டின் அருகில் உள்ள குளம் அருகே விளையாடிக் கொண்டு இருந்தார்.அப்போது, யாசினி குளத்தில் தவறி விழுந்துள்ளார். தகவலறிந்த பெற்றோர் மற்றும் அருகிலிருந்தோர் யாசினியை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, சிறுமியை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார்.இதுகுறித்து, மப்பேடு போலீசில், லாரன்ஸ் அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X