சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வினர் சாலை மறியல்

Added : நவ 22, 2020
Share
Advertisement
கடலுார் : உதயநிதி கைதை கண்டித்து கடலுார் மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க., வினர் 574 பேரை போலீசார் கைது செய்தனர்.குத்தாலத்தில் பிரசாரம் செய்த உதயநிதியை போலீசார் கைது செய்ததை கண்டித்து கடலுாரில் தி.மு.க., வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். நகர செயலர் ராஜா தலைமையில் மறியலில் ஈடுபட்ட வி.ஆர்.,டிரஸ்ட் விஜயசுந்தரம் உட்பட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.ரெட்டிச்சாவடி பஸ்

கடலுார் : உதயநிதி கைதை கண்டித்து கடலுார் மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க., வினர் 574 பேரை போலீசார் கைது செய்தனர்.

குத்தாலத்தில் பிரசாரம் செய்த உதயநிதியை போலீசார் கைது செய்ததை கண்டித்து கடலுாரில் தி.மு.க., வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். நகர செயலர் ராஜா தலைமையில் மறியலில் ஈடுபட்ட வி.ஆர்.,டிரஸ்ட் விஜயசுந்தரம் உட்பட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரெட்டிச்சாவடி பஸ் நிறுத்தத்தில் வடக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் குணசேகரன் தலைமையில், ஒன்றிய துணை செயலர்கள் தனஞ்ஜெயன், குணசேகரன், மாவட்ட பிரதிநிதி வீரராகவன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் உட்பட 41 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிதம்பரம் தெற்கு வீதியில் நகர செயலர் செந்தில்குமார் தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், நிர்வாகிகள் வெங்கடேசன், கிருஷ்ணமூர்த்தி, அப்பு சந்திரசேகர், பாலசுப்ரமணியன், அருள் உட்பட 42 பேரை போலீசார் கைது செய்தனர்.மாவட்டத்தில் நெய்வேலி, விருத்தாசலம் உட்பட 9 இடங்களில் நடந்த மறியலில் 6 பெண்கள் உட்பட 574 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெண்ணாடம் பெண்ணாடத்தில், சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க., மேற்கு மாவட்ட செயலர் கணேசன் எம்.எல்.ஏ., தலைமையில் அக்கட்சியினர் 100 பேரை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கிருபாலட்சுமி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.நெய்வேலிசபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தலைமையில் அக்கட்சியினர் என்.எல்.சி., ஆர்ச்கேட் எதிரில் மறியலில் ஈடுபட்டனர்.

பண்ருட்டி ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், நெய்வேலி நகர செயலர் பக்கிரிசாமி, தொ.மு.ச., துணை செயலர் ராமச்சந்திரன், ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ஆனந்தஜோதி, வெங்கடேசன், கருணாநிதி, நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள் செந்தில், இளங்கோ ஊராட்சி செயலர்கள் அறிவழகன், அன்பழகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜேஷ், நகர இளைஞரணி ஸ்டாலின், வழக்கறிஞர் சிலம்பரசன் உட்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X