பொது செய்தி

தமிழ்நாடு

பரனுார் சுங்கச்சாவடியில் டூ- - வீலர் பாதை சீரழிவு

Added : நவ 22, 2020
Share
Advertisement
செங்கல்பட்டு : பரனுார் சுங்கச்சாவடியில், இருசக்கர வாகன போக்குவரத்து பாதை சீரழிந்ததால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். செங்கல்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதியினர், சென்னை, தாம்பரம், மறைமலை நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு, அரசு மற்றும் தனியார் வேலை மற்றும் பிற தேவைகளுக்கு செல்கின்றனர். கொரோனா வைரஸ் தொற்று சூழலில், பஸ்சில் சமூக இடைவெளி பின்பற்றி, பயணம் செய்யும் நிலை

செங்கல்பட்டு : பரனுார் சுங்கச்சாவடியில், இருசக்கர வாகன போக்குவரத்து பாதை சீரழிந்ததால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

செங்கல்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதியினர், சென்னை, தாம்பரம், மறைமலை நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு, அரசு மற்றும் தனியார் வேலை மற்றும் பிற தேவைகளுக்கு செல்கின்றனர். கொரோனா வைரஸ் தொற்று சூழலில், பஸ்சில் சமூக இடைவெளி பின்பற்றி, பயணம் செய்யும் நிலை உள்ளது. இதனால், இருசக்கர வாகனங்களிலேயே பலர் செல்கின்றனர்.இவர்கள், செங்கல்பட்டு அடுத்த, பரனுார் சுங்கச்சாவடியை கடந்து செல்ல வேண்டும்; திரும்பும்போதும் அவ்வாரே வர வேண்டும்.

பரனுார் சுங்கச்சாவடி பகுதியில், சென்னை - திருச்சி இரு தடங்களிலும், இருசக்கர வாகன போக்குவரத்துக்கு என, தனி பாதை உள்ளது.இப்பாதை, பல ஆண்டுகளாக சீரழிந்த நிலையில், ஆபத்தான பள்ளங்களுடன் உள்ளது. சமீபத்தில் பெய்த மழை நீர், பள்ளங்களில் தேங்கி நிற்கிறது.இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளங்களில் கடக்கும்போது, தடுமாறி கவிழ்கின்றனர்; சமயங்களில், உயிர் இழப்பும் ஏற்படுகிறது. இத்தடத்தை சீரமைக்க, தொடர்ந்து வலியுறுத்தியும், தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் அலட்சியப்படுத்துகிறது.

இது குறித்து, செங்கல்பட்டைச் சேர்ந்த வாகன ஓட்டி வி.யுவராஜ் கூறியதாவது:பரனுார் சுங்கச்சாவடியில், இருபுறமும் இருசக்கர வாகன போக்குவரத்துக்கு தனி பாதை உள்ளது. இந்த பாதையை முறையாக சீரமைக்காததால், ஏற்பட்டுள்ள பள்ளங்களால் விபத்து அபாயம் நிலவுகிறது. கட்டணம் மட்டும் வசூல் செய்யும் நிர்வாகம், சாலைகள் அமைக்க முன்வர வில்லை. இந்த பள்ளத்தில், வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். சிலர் இறந்துள்ளனர். பெரிய விபத்துகள் நடப்பதற்குள், இருசக்கர வாகன பாதையை சீரமைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X