கபில் சிபலை அடுத்து குலாம்நபி ஆசாதும் சிவப்புக்கொடி! காங்., கட்சிக்கு சரியான தலைமை கேட்டு 'ட்விட்'

Updated : நவ 24, 2020 | Added : நவ 22, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி: பீஹார் சட்டசபை தேர்தல் தோல்வியை அடுத்து, காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்கள் மீண்டும் சிவப்புக் கொடி துாக்கத் துவங்கியுள்ளனர். கபில் சிபலை அடுத்து, குலாம்நபி ஆசாதும், காங்கிரசுக்கு சரியான தலைமை கேட்டு, 'டுவிட்டரில்' கருத்து பதிவிட்டுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரமும், ராகுலுக்குக் கடிதம் எழுதிஉள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.சோனியாவை
Congress, Structure, Collapsed, Kapil Sibal, Ghulam Nabi Azad

புதுடில்லி: பீஹார் சட்டசபை தேர்தல் தோல்வியை அடுத்து, காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்கள் மீண்டும் சிவப்புக் கொடி துாக்கத் துவங்கியுள்ளனர். கபில் சிபலை அடுத்து,
குலாம்நபி ஆசாதும், காங்கிரசுக்கு சரியான தலைமை கேட்டு, 'டுவிட்டரில்' கருத்து
பதிவிட்டுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரமும், ராகுலுக்குக் கடிதம் எழுதிஉள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.சோனியாவை விட்டுக் கொடுக்காமல், மறைமுகமாக கட்சி தலைமையை விமர்சித்து, மூத்த தலைவர்கள் காய்களை நகர்த்தி வருகின்றனர்.

லோக்சபாவுக்கு கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் அடைந்த தோல்விக்கு பொறுப்பேற்று, காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து, ராகுல் விலகினார். இடைக்கால தலைவராக, சோனியா பொறுப்பேற்றார்.


விமர்சனம்

ஒன்றரை ஆண்டுகள் கடந்த பின்னும், கட்சிக்கு முழு நேர தலைவர் நியமிக்கப்படவில்லை.
கட்சியின் தலைமைக்கு, கடந்த ஆகஸ்டில், மூத்த தலைவர்களான குலாம்நபி ஆசாத், கபில்
சிபல், ஆனந்த சர்மா உள்ளிட்ட, 23 பேர் கடிதம் எழுதினர்.அதில், 'காங்கிரசில் உள்கட்சி தேர்தல் நடத்தி, தலைவர் உட்பட அனைத்து நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட வேணடும்' என,
கூறியிருந்தனர்; இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, பீஹார் சட்டசபைக்கும், 11 மாநிலங்களில் காலியாக இருந்த, 59 சட்டசபை தொகுதிகளுக்கும், சமீபத்தில் நடந்த தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது.இதைஅடுத்து, கட்சியின் செயல்பாடுகளை, கபில் சிபல் பகிரங்கமாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், தனியார், 'டிவி' சேனல் ஒன்றுக்கு, கபில் சிபல் நேற்று அளித்தபேட்டியில் கூறியதாவது:.தலைவர் இல்லாமல், ஒரு கட்சியால் எப்படி செயல்பட முடியும்? அதனால், காங்கிரசால் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட முடியவில்லை. செல்லும் திசை தெரியாமல், கட்சி தொண்டர்கள் தவித்து வருகின்றனர்.


சமீபத்திய தேர்தல் முடிவுகள், பீஹார், உ.பி., உள்ளிட்ட பல மாநிலங்களில், காங்கிரஸ் ஒரு
சக்தியாக இல்லை என்பதை தெளிவுப் படுத்தியுள்ளன.மத்திய பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில், பா.ஜ., - காங்., இடையே நேரடி போட்டி நிலவுகிறது. அங்கும், கட்சி தோல்வியை சந்தித்துள்ளது தான் வேதனை.இவ்வாறு, அவர் கூறினார்.

இதேபோல், கட்சியின் மூத்த தலைவரான குலாம்நபி ஆசாத், 'டுவிட்டரில' பதிவிட்டு இருந்ததாவது: கட்சி பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் யாரும், தொண்டர்களுடன் நெருங்கி
பழகுவதில்லை. பதவி கிடைத்ததும், ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் தங்கி, கட்சிப் பணியை மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.


அவசியம்இந்த கலாசாரம் மாறாத வரை, காங்கிரசால் எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாது.
தலைவர்கள், நிர்வாகிகளை நியமிக்கும் பழக்கத்தை கைவிட்டு, தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க பட வேண்டும்.அப்போது தான், தொண்டர்களுடன் நெருங்கி பழக வேண்டிய அவசியம்,
அவர்களுக்கு ஏற்படும். கொரோனா பரவல் காலத்தில், கட்சி தலைமையால் எதுவும் செய்ய முடியவில்லை.

நாங்கள் தெரிவித்த பல கோரிக்கைகளை கட்சி தலைமை ஏற்றுள்ளது.உட்கட்சி தேர்தல்
நடத்தப்பட்டு, நிர்வாகிகளை தேர்வு செய்ய, கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்போதுதான், பா.ஜ.,வுக்கு மாற்றாக கட்சி வலுப்பெற முடியும்.இவ்வாறு, பதிவிட்டு இருந்தார்.பிரச்னை இல்லைகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷீத் கூறியதாவது:சமீபத்தில் தேர்தல்
முடிவுகள், காங்கிரசுக்கு அதிர்ச்சியளித்துள்ளது உண்மை தான். அதற்காக, கட்சியையும்,
தலைமையையும் பகிரங்கமாக விமர்சிப்பது நல்லதல்ல.கட்சி பிரச்னைகளை, கட்சிக்குள் தான் பேசி தீர்க்க வேண்டும். கட்சியில் தலைமைக்கு பிரச்னை இல்லை, தலைவர் இல்லாதது ஒரு பிரச்னையில்லை.

கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுக்கு தலைவர் கிடையாது; பொதுச் செயலர்கள் மட்டும் தான். அந்த கட்சிகள் செயல்படவில்லையா?இவ்வாறு, அவர் கூறினார். இதேபோல், முன்னாள்
மத்திய அமைச்சர் சிதம்பரம், காங்கிரஸ் ராகுலுக்கு, இ - மெயில் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கோவாவில், சோனியாவுடன் தங்கி இருக்கும் ராகுலுக்கு, தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோனியாவை வெளிப்படையாக விமர்சிக்காமலும், விட்டுக் கொடுக்காமலும், அதேநேரத்தில், கட்சி தலைமையை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடுமையாக விமர்சித்து, காய் நகர்த்தி வருவது, அந்த கட்சி வட்டாரத்தில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-நவ-202021:39:41 IST Report Abuse
சிவம் காங்கிரஸ் தலைவர் என்று யாரை தேர்ந்தெடுத்தலும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பேசாமல் கட்சியை கலைத்து விட்டு கட்சியின் சொத்துக்கள் அனைத்தையும் தலைவர்கள் தொண்டர்கள் என்று பிரித்து எடுத்து கொண்டு விட்டு, நாட்டை விட்டு விடுங்கள். இது தான் நாட்டிற்கும் நல்லது காங்கிரஸ் கட்சிக்கும் நல்லது.
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
23-நவ-202018:47:26 IST Report Abuse
spr "கட்சியில் தலைமைக்கு பிரச்னை இல்லை, தலைவர் இல்லாதது ஒரு பிரச்னையில்லை."கட்சியே இல்லையாம் அதற்கு தலைவர் என்ற ஒருவர் வேண்டுமா ? எந்த காலத்தில் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின் பலத்தில் தேர்தலை எதிர் கொண்டது? எப்பொழுதுமே பணம், பதவி இவற்றைக் கொடுத்து, பிறர் முதுகில் சவாரி செய்துதானே வழக்கம் அதனால்தானே கழகங்கள் உருவாயின அப்படித்தானே கொள்ளையடிப்பது சட்டபூர்வமாகியது பழக்க தோஷம் காங்கிரஸ் தலைவர்களும் அப்படி மாறினார்கள்
Rate this:
Cancel
Unmai vilambi - Triolet,மொரிஷியஸ்
23-நவ-202016:16:57 IST Report Abuse
Unmai vilambi காங்கிரஸின் தலைமை மாறும்வரை பிஜேபியின் வளர்ச்சி உச்சத்தை தொடுவது நிச்சயம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X