பொது செய்தி

தமிழ்நாடு

பூண்டியில் 1.7 டி.எம்.சி., நீர் இருப்பு

Added : நவ 22, 2020
Share
Advertisement
ஊத்துக்கோட்டை : பூண்டி நீர்த்தேக்கத்தில், தற்போது, 1.7 டி.எம்.சி., தண்ணீர் இருப்பு உள்ளதாக, பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு மழை நீர் மற்றும் கிருஷ்ணா நீர் முக்கிய நீர் ஆதாரம். கடந்த செப்., 21ம் தேதி முதல், கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட, கிருஷ்ணா நீர், சாய்கங்கை கால்வாய்

ஊத்துக்கோட்டை : பூண்டி நீர்த்தேக்கத்தில், தற்போது, 1.7 டி.எம்.சி., தண்ணீர் இருப்பு உள்ளதாக, பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு மழை நீர் மற்றும் கிருஷ்ணா நீர் முக்கிய நீர் ஆதாரம். கடந்த செப்., 21ம் தேதி முதல், கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட, கிருஷ்ணா நீர், சாய்கங்கை கால்வாய் வழியே வந்து கொண்டு இருக்கிறது. இதனிடையே, வடகிழக்கு பருவ மழை காரணமாக பெய்த மழை நீரும், நீர்த்தேக்கத்திற்கு வந்தது.நேற்று, காலை, 6:00 மணி நிலவரப்படி, நீர்த்தேக்கத்தில், 1.7 டி.எம்.சி., நீர் உள்ளது. நீர்மட்டம், 29.91 அடி. கிருஷ்ணா நீர் வினாடிக்கு, 680 கன அடி வீதம் வந்து கொண்டு இருக்கிறது.

இங்குள்ள இணைப்புக் கால்வாய் மூலம் வினாடிக்கு, 100 கன அடி வீதம் புழல் நீர்த்தேக்கத்திற்கும், 15 கன அடி சோழவரத்திற்கும் என, மொத்தம், 115 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.கிருஷ்ணா நீர் தொடர்ந்து வந்து கொண்டு இருப்பதால், விரைவில் முழு கொள்ளளவையும் எட்டும் என, எதிர்பார்க்கப்படுவதாக பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X