தமிழ்நாடு

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையால் மீனவர்களுக்கு எச்சரிக்கை!

Added : நவ 22, 2020
Share
Advertisement
கடலுார் : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து புயலாக மாற வாய்ப்புள்ளதால், கடலுார் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.வடகிழக்குப் பருவமழை இந்த ஆண்டு தாமதமாக துவங்கியது. இதுவரை இயல்பைவிட குறைந்த அளவே மழைபெய்துள்ளது. மழைக்காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் என மூன்று மாதங்களில் 697.8 மி.மீ., மழை பெய்ய
 வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையால் மீனவர்களுக்கு எச்சரிக்கை!

கடலுார் : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து புயலாக மாற வாய்ப்புள்ளதால், கடலுார் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

வடகிழக்குப் பருவமழை இந்த ஆண்டு தாமதமாக துவங்கியது. இதுவரை இயல்பைவிட குறைந்த அளவே மழைபெய்துள்ளது. மழைக்காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் என மூன்று மாதங்களில் 697.8 மி.மீ., மழை பெய்ய வேண்டும். இதுவரை 278 மி.மீ., மழை மட்டுமே பெய்துள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் தெற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாற வாய்ப்புள்ளது.

மேலும் தீவிரமாகி வரும் 25ம் தேதி புயலாக மாறி காரைக்கால், மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் கடலோரப் பகுதியான கடலுார் மாவட்டத்தில் அதிகபட்சமாக 200 மி.மீ., வரை மழை பெய்யலாம் என கூறப்படுகிறது. மேலும் கடல் பகுதி யில் 60 முதல் 75 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும். அலை 2 மீட்டர் வரை எழும்பும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதியையொட்டி மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. அனைத்துத்துறை அலுவலர்கள், கடலோரப்பகுதி கிராம அளவிலான அலுவலர்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.கடலுார் மாவட்டத்தில் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், கடலில் உள்ள படகுகள் கரைக்கு திரும்புமாறும், விசைப்படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்குமாறும் மீன் வளத்துறை கிராமங்களில் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றன.அதனைத்தொடர்ந்து கடலோப்பகுதியில் இருந்த படகுகளை மீனவர்கள் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X