பொது செய்தி

தமிழ்நாடு

மின்துறை அமைச்சருக்கு கரும்பு விவசாயிகள் நன்றி

Added : நவ 22, 2020
Share
Advertisement
விழுப்புரம் : தமிழக அரசு மற்றும் மின்சார துறை அமைச்சர் தங்கமணிக்கு நன்றி தெரிவித்து, கரும்பு விவசாயிகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் விழுப்புரம் கரும்பு விவசாயிகள் சமுதாய கூடத்தில் நடந்த கூட்டத்திற்கு, சங்க தலைவர் வழக்கறிஞர் பாண்டியன் தலைமை தாங்கினார்.துணை தலைவர்கள் கலிவரதன், ராஜாராமன், வெங்கடசாமி,

விழுப்புரம் : தமிழக அரசு மற்றும் மின்சார துறை அமைச்சர் தங்கமணிக்கு நன்றி தெரிவித்து, கரும்பு விவசாயிகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் விழுப்புரம் கரும்பு விவசாயிகள் சமுதாய கூடத்தில் நடந்த கூட்டத்திற்கு, சங்க தலைவர் வழக்கறிஞர் பாண்டியன் தலைமை தாங்கினார்.துணை தலைவர்கள் கலிவரதன், ராஜாராமன், வெங்கடசாமி, கிருஷ்ணதாஸ் முன்னிலை வகித்தனர்.

இதில், கடந்த 2018-19 மற்றும் 2019-20ம் ஆண்டில் ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் குழுமம் உற்பத்தி செய்த மின்சாரத்தை மின்வாரியத்திறக்கு வழங்கியதில், தமிழக அரசு தர வேண்டிய நிலுவைத் தொகை ரூ.23 கோடியை ஆலை நிர்வாகத்திற்கு வழங்கக்கோரி, சங்கம் சார்பில் கொடுத்த மனுவை ஏற்று நிலுவை தொகையை விவசாயிகளுக்கு நேரடியாக வங்கி கணக்கில் அனுப்புவதாக அறிவித்துள்ள மின்சார துறை அமைச்சர் தங்கமணி மற்றும் தமிழக அரசிற்கும் நன்றி தெரிவிப்பது.

கடந்த 2019-20ம் ஆண்டில் இரண்டு பருவத்திலும் கரும்பு வெட்டி அனுப்பிய விவசாயிகளுக்கு காலதாமதமாக பட்டுவாடா செய்யப்படும் கிரைய பணத்திற்கு வட்டி கணக்கீடு செய்து ஆலை நிர்வாகம் வழங்க வேண்டும்.என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.அப்போது, துணை தலைவர்கள் தண்டபாணி, காத்தவராயன், தேவேந்திரன், துணை செயலாளர்கள் ரங்கநாதன், பாலசுப்பிரமணியன், ராஜசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X