சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இளம்பெண் மரணம்: உறவினர்கள் மறியல்

Added : நவ 22, 2020
Share
Advertisement
திருப்போரூர் : இளம்பெண் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, உறவினர்கள், ஓ.எம்.ஆர்., சாலையில், மறியலில் ஈடுபட்டனர். திருப்போரூர் அடுத்த, கேளம்பாக்கம் ஜோதிநகரைச் சேர்ந்தவர் தினேஷ்ராமன், 33. இவர் மனைவி சவுமியா, 27. தம்பதிக்கு, 5 வயதில் குழந்தை உள்ளது.இந்நிலையில், நேற்று காலை, 11:30 மணிக்கு, சவுமியாவின் பெற்றோருக்கு, மாமியார் போன் செய்து, சவுமியா இறந்துவிட்டார் என,

திருப்போரூர் : இளம்பெண் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, உறவினர்கள், ஓ.எம்.ஆர்., சாலையில், மறியலில் ஈடுபட்டனர்.

திருப்போரூர் அடுத்த, கேளம்பாக்கம் ஜோதிநகரைச் சேர்ந்தவர் தினேஷ்ராமன், 33. இவர் மனைவி சவுமியா, 27. தம்பதிக்கு, 5 வயதில் குழந்தை உள்ளது.இந்நிலையில், நேற்று காலை, 11:30 மணிக்கு, சவுமியாவின் பெற்றோருக்கு, மாமியார் போன் செய்து, சவுமியா இறந்துவிட்டார் என, கூறியுள்ளார்.இதையடுத்து, அங்கு வந்து பெற்றோர் பார்த்தபோது, சவுமியாவின் கழுத்தில் தழும்பும், இடது கையில் சிறிய வெட்டுகாயமும் இருந்தது.

இதுகுறித்து, சவுமியாவின் குடும்பத்தினர் கேட்டதற்கு, அவர் துாக்கிட்டு தற்கொலை செய்ததாக கூறிஉள்ளனர்.இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், கேளம்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார், சவுமியாவின் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். தொடர்ந்து, கணவன் தினேஷ்ராமன் மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணையை துவக்கினர்.இதற்கிடையில், இதுகுறித்து கேள்விப்பட்ட உறவினர்கள், 50க்கும் மேற்பட்டோர், சவுமியாவின் கணவரது குடும்பத்தினர், சவுமியாவை கொலை செய்திருக்கலாம்.

அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்ய வேண்டும் என, ஓ.எம்.ஆர்., சாலையில், மறியலில் ஈடுபட்டனர். போலீசார், அவர்களிடம் பேச்சு நடத்தியதை அடுத்து, கலைந்து சென்றனர். கொலையா, தற்கொலையா என, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X