பொது செய்தி

தமிழ்நாடு

சமூக நலத்துறை திட்டங்கள் குறித்து கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
கடலுார் : கடலுார் மாவட்ட சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கலெக்டர் சந்திரசேகர சகாமுரி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் நினைவுத் திருமணம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமணம், மணியம்மை யார் விதவை மகள் திட்டம், டாக்டர் தர்மாம்பால்

கடலுார் : கடலுார் மாவட்ட சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கலெக்டர் சந்திரசேகர சகாமுரி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் நினைவுத் திருமணம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமணம், மணியம்மை யார் விதவை மகள் திட்டம், டாக்டர் தர்மாம்பால் விதவை மறுமணம் மற்றும் அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் போன்ற திருமண நிதி உதவி திட்டத்தில் நிலுவை விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டது.சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திர திட்டத்தின் மூலம் இந்நிதியாண்டில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசிடமிருந்து தையல் இயந்திரம் பெற்று வழங்க அறிவுறுத்தப்பட்டது.

முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயனாளிகள் பயன்பெற இணை இயக்குனர் சுகாதாரம் மூலம் தொடர்பு கொண்டு 35 வயதிற்குள் அறுவை சிகிச்சை செய்துகொண்ட (தாய்), ஆண் வாரிசு இல்லாத பெண் குழந்தைகள் மட்டும் உள்ள பயனாளிகளை கண்டறிந்து இத்திட்டத்தில் பயனடையவும் முழு நிதி ஒதுக்கீட்டினையும் பயன்படுத்தவும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டை பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது.கூட்டத்தில் மாவட்ட சமூகநல அலுவலர் அன்பழகி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X