பொது செய்தி

தமிழ்நாடு

ஆராய்ச்சி படிப்புகளுக்கான எழுத்து தேர்வு: டிச., 15ம் தேதி முதல் துவக்கம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
கோவை:பி.எச்டி., உள்ளிட்ட ஆராய்ச்சி படிப்புகளுக்கான எழுத்து தேர்வு டிச., 15ம் தேதி முதல் துவங்க இருப்பதாக, பாரதியார் பல்கலை அறிவித்துள்ளது.கோவை பாரதியார் பல்கலையின் கீழ் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில், 112 அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லுாரிகள் செயல்படுகின்றன.இவற்றில் பி.எச்டி., உள்ளிட்ட ஆராய்ச்சி படிப்புகள் பகுதி நேரமாகவும், முழு

கோவை:பி.எச்டி., உள்ளிட்ட ஆராய்ச்சி படிப்புகளுக்கான எழுத்து தேர்வு டிச., 15ம் தேதி முதல் துவங்க இருப்பதாக, பாரதியார் பல்கலை அறிவித்துள்ளது.கோவை பாரதியார் பல்கலையின் கீழ் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில், 112 அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லுாரிகள் செயல்படுகின்றன.
இவற்றில் பி.எச்டி., உள்ளிட்ட ஆராய்ச்சி படிப்புகள் பகுதி நேரமாகவும், முழு நேரமாகவும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த படிப்புகளுக்கான எழுத்து தேர்வு, டிச., மாதம் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி டிச., 15ம் தேதி முதல் தாளும், 17ம் தேதி இரண்டாம் தாளும், 19ம் தேதி மூன்றாம் தாளும் நடத்தப்படுகிறது. பல்கலை மாணவர்களுக்கு பல்கலை துறைகளிலும், தாராபுரம், உடுமலை, பொள்ளாச்சி பகுதிகளை சேர்ந்த மாணவர்களுக்கு, உடுமலை கமலம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியிலும், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு உதகை அரசு கலை கல்லுாரியிலும், கோவையை சேர்ந்தவர்களுக்கு டாக்டர் என்.ஜி.பி., கலை, அறிவியல் கல்லுாரியிலும், திருப்பூரை சேர்ந்தவர்களுக்கு திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரியிலும், தேர்வு நடத்தப்படுகிறது.
புதிதாக விண்ணப்பித்த மாணவர்களுக்கு, பதிவு எண் வழங்கப்பட்டுள்ளது. அதனை சரிபார்த்து உரிய மையத்துக்கு சென்று தேர்வு எழுத வேண்டும்.நுழைவுச்சீட்டு டிச., 11ம் தேதி அந்தந்த மையங்களில் வழங்கப்படும் என தெரிவித்துள்ள பாரதியார் பல்கலை, மேலும் விபரங்களுக்கு, www.b-u.ac.in என்ற பல்கலை இணையதளத்தை, பார்வையிடுமாறு அறிவுறுத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X