பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகள் அரசு நல உதவி பெற சட்டப்பணி ஆணை குழுவை அணுகலாம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
திருவள்ளூர் : மாற்றுத்திறனாளிகள், அரசின் நலத்திட்ட உதவியினை பெற, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவை அணுகலாம். திருவள்ளூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பு:தமிழக அரசு சார்பில், கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவதற்காக, மார்ச் முதல், ஜூலை வரை, பொது முடக்கம் அறிவித்தது.வாழ்வாதாரம் பாதித்த, மாற்றுத் திறனாளிகளுக்கு, ஆயிரம் ரூபாய்

திருவள்ளூர் : மாற்றுத்திறனாளிகள், அரசின் நலத்திட்ட உதவியினை பெற, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவை அணுகலாம்.

திருவள்ளூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பு:தமிழக அரசு சார்பில், கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவதற்காக, மார்ச் முதல், ஜூலை வரை, பொது முடக்கம் அறிவித்தது.வாழ்வாதாரம் பாதித்த, மாற்றுத் திறனாளிகளுக்கு, ஆயிரம் ரூபாய் பொது முடக்க நிவாரணம் வழங்க ஆணை பிறப்பித்து உள்ளது. இது, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் வழங்கப்படுகிறது.தகுதி இருந்தும், இந்த உதவி தொகையை பெறாதோர், திருவள்ளூர் ஒருங்கிணைந்த, மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள, மாற்று முறை தீர்வு மையத்தில் இயங்கும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவை அணுகலாம்.

நேரில் வர இயலாதோர், தங்கள் விபரங்களை மனுவாக எழுதி, தலைவர் / முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம், திருவள்ளூர் என்ற முகவரிக்கு அனுப்பலாம்.மேலும், 044 - 27660120 என்ற தொலைபேசியிலோ, அல்லது, பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி, அம்பத்துார், திருவொற்றியூர், ஊத்துக்கோட்டை மற்றும் பள்ளிப்பட்டு, நீதிமன்ற வளாகத்தில் இயங்கும், வட்ட சட்டப் பணிகள் குழுவை அணுகலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X