சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இ.சி.ஆரில் கோர விபத்து ஐ.டி., ஊழியர் பலி

Added : நவ 22, 2020
Share
Advertisement
மாமல்லபுரம் : கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரத்தில் நேற்று, கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், ஐ.டி., ஊழியர் இறந்தார். சென்னை, தாம்பரம், வேளச்சேரி சாலையைச் சேர்ந்த கிருஷ்ணப்பா மகன் ராமகிருஷ்ணன், 39. சென்னையில், தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியராக பணிபுரிந்தார்.இவர் நேற்று, சென்னையிலிருந்து, புதுச்சேரிக்கு, 'எர்ட்டிகா' காரில் சென்றார். உடன், அவரது தோழியும்

மாமல்லபுரம் : கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரத்தில் நேற்று, கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், ஐ.டி., ஊழியர் இறந்தார்.

சென்னை, தாம்பரம், வேளச்சேரி சாலையைச் சேர்ந்த கிருஷ்ணப்பா மகன் ராமகிருஷ்ணன், 39. சென்னையில், தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியராக பணிபுரிந்தார்.இவர் நேற்று, சென்னையிலிருந்து, புதுச்சேரிக்கு, 'எர்ட்டிகா' காரில் சென்றார். உடன், அவரது தோழியும் சென்றார்.கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம், பூஞ்சேரி பகுதியில், மதியம், 2:00 மணிக்கு கடந்தபோது, எதிரில், சென்னை நோக்கி வந்த, 'ஹூண்டாய் கிரெடா' காரும், ராமகிருஷ்ணன் காரும் மோதின.

மேலும், முன்னால் சென்ற, ஷேர் ஆட்டோ மீதும், கார் மோதியது.இந்த கோர விபத்தில், பலத்த காயமடைந்த ராமகிருஷ்ணன், அதே இடத்திலேயே இறந்தார். தோழி, லேசான காயத்துடன் தப்பினார்.ஆட்டோ ஓட்டுனர், மணமை முருகன், 33, 'ஹூண்டாய்' கார் ஓட்டுனர் ஊரப்பாக்கம் மனோஜ், 30, ஆகியோர் காயமடைந்தனர்.தோழி மற்றும் காயமடைந்தவர்கள், செங்கல்பட்டு, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து, மாமல்லபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X