தமிழ்நாடு

பெலாந்துறை அணை பக்கவாட்டு சுவரில் விரிசல்: புனரமைக்க விவசாயிகள் கோரிக்கை

Updated : நவ 23, 2020 | Added : நவ 22, 2020
Share
Advertisement
பெண்ணாடம் : பெலாந்துறை அணைக்கட்டு பக்கவாட்டு சுவரில் விரிசல் ஏற்பட்ட பகுதியை பொதுப்பணித்துறை அதிகாரிகள்ஆய்வு மேற்கொண்டு புனரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பெண்ணாடம் அடுத்த பெலாந்துறை - பெரியகொசப்பள்ளம் இடையே வெள்ளாற்றின் குறுக்கே கடந்த 1876ம் ஆண்டு 200.80மீ., நீளத்தில் பாசனத்திற்காக அணை கட்டப்பட்டது.இதன் பாசனம் மூலம் 50க்கும் மேற்பட்ட
பெலாந்துறை அணை பக்கவாட்டு சுவரில் விரிசல்: புனரமைக்க விவசாயிகள் கோரிக்கை

பெண்ணாடம் : பெலாந்துறை அணைக்கட்டு பக்கவாட்டு சுவரில் விரிசல் ஏற்பட்ட பகுதியை பொதுப்பணித்துறை அதிகாரிகள்ஆய்வு மேற்கொண்டு புனரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெண்ணாடம் அடுத்த பெலாந்துறை - பெரியகொசப்பள்ளம் இடையே வெள்ளாற்றின் குறுக்கே கடந்த 1876ம் ஆண்டு 200.80மீ., நீளத்தில் பாசனத்திற்காக அணை கட்டப்பட்டது.இதன் பாசனம் மூலம் 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 234 ஏக்கர் பரப்பிலான நிலங்கள் பாசனம் பெறுகின்றன. நீரை பயன்படுத்தி கரும்பு, நெல், கேழ்வரகு மற்றும் தோட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

மேலும், டி.வி.புத்தூர், ராஜேந்திரப்பட்டிணம், ஆனந்தகுடி, கொக்கரம்பேட்டை, குணமங்கலம், திருபுத்தூர், மேல்புளியங்குடி, வக்கரமாரி, நகரப்பாடி, சேல்விழி, கலியன்குப்பம், ஸ்ரீ நெடுஞ்சேரி, கானூர், கலிங்கனேரி, பாண்டியன் பெரிய ஏரி, பாண்டியன் சித்தேரி, பூவனேரி, பாளையங்கோட்டை ஏரி என, 18 ஏரிகள் கிளை வாய்க்கால்கள் மூலம் பாசனத்திற்கு தண்ணீர் பெறுகின்றன.

இந்நிலையில், போதிய பராமரிப்பின்றி உள்ள பெலாந்துறை அணைக்கட்டில் தரைத்தளம், ஷட்டர்கள், இருபுறம் உள்ள கரைகள், தடுப்பு சுவர்கள் சேதமடைந்தன.அணைக்கட்டை புனரமைக்க வலியுறுத்தி இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதனையேற்று, கடந்த 2015ல் 17 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அணை புனரமைக்கப்பட்டது.

நாளடைவில் பராமரிப்பின்றி உள்ள அணைக்கட்டில் பெரியகொசப்பள்ளம் பகுதியில் அணைக்கு இறங்கும் படிக்கட்டின் பக்கவாட்டு சுவர்களில் விரிசல் ஏற்பட்டு, கான்கிரீட் காரைகள் பெயர்ந்து விழுந்துள்ளன.இதனால் வெள்ளாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால், அணைக்கட்டின் பக்கவாட்டு சுவர்கள் வலுவிழந்து பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் பெலாந்துறை அணைக்கட்டில் விரிசல் ஏற்பட்ட பகுதியை ஆய்வு மேற்கொண்டு, சேதமடைந்துள்ள பகுதியை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X