ரத்து செய்யப்படும் விமானங்கள்: புலம்பித்தீர்க்கின்றனர் பயணிகள்

Added : நவ 22, 2020
Share
Advertisement
கோவை:கோவை சர்வதேச விமானநிலையத்தில், அதிக விமானங்கள் ரத்து செய்யப்படுவதால், பயணிகள் அவதியடைகின்றனர்.கொரோனா ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு, கட்டுப்பாடுகளுடன் மீண்டும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கோவை சர்வதேச விமான நிலையத்தில் தற்போது, 15க்கும் மேற்பட்ட விமானங்கள் மூலம், உள்நாட்டு சேவை வழங்கப்பட்டு வருகிறது.இருந்தும், தினமும், ஒன்று முதல் மூன்று விமானங்கள்

கோவை:கோவை சர்வதேச விமானநிலையத்தில், அதிக விமானங்கள் ரத்து செய்யப்படுவதால், பயணிகள் அவதியடைகின்றனர்.கொரோனா ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு, கட்டுப்பாடுகளுடன் மீண்டும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கோவை சர்வதேச விமான நிலையத்தில் தற்போது, 15க்கும் மேற்பட்ட விமானங்கள் மூலம், உள்நாட்டு சேவை வழங்கப்பட்டு வருகிறது.இருந்தும், தினமும், ஒன்று முதல் மூன்று விமானங்கள் வரை ரத்து செய்யப்படுவதால், பயணிகள் அவதியடைகின்றனர்.
இதன் காரணமாக, வேறு விமானநிலையங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. அங்கு காத்திருக்க வேண்டிய காரணத்தால், கொரோனா பரவும் அச்சமும் பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.அதே நேரம், வடகிழக்கு பருவமழையும் துவங்கியுள்ளதால், வரும் நாட்களில் விமானங்கள் தாமதம், ரத்து மற்றும் நேரம் மாற்றம் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாக, விமானநிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, அதிகாரிகள் கூறுகையில், 'மத்திய அரசு விமான சேவைகள் வழங்க தளர்வுகள் அளித்தாலும், பயணிகள் மற்றும் கார்கோ விமான சேவை பழைய நிலைக்கு இன்னும் திரும்பவில்லை. மிகவும் குறைவான பயணிகள் காரணமாக, விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன.இருந்தும் டிக்கெட் புக் செய்தவர்களுக்கு விமான நிறுவனத்தினர், மாற்று ஏற்பாடு செய்து அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X